தேடுதல்

திபெத் புத்த மடாலயம்  முன்பு திபெத் புத்த மடாலயம் முன்பு  (ANSA)

விதையாகும் கதைகள் : விருந்தாளியாக வந்திருக்கிறேன்

இவ்வுலகிற்கு விருந்தாளியாக வந்து, நூறு ஆண்டுகளுக்குள் திரும்பிச்செல்ல உள்ள மனிதர், தேவையில்லாத பொருட்களைக் குவித்துக்கொண்டே செல்வதேன்?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

துறவி ஒருவரைப் பார்க்க நீண்ட தூரத்திலிருந்து ஒருவர் வந்தார். துறவி தங்கியிருந்த குடிலில் ஒரு பொருளும் இல்லை.

வந்தவர் வியப்புடன் கேட்டார், “உங்களுக்கென்று பொருள் எதுவும் கிடையாதா?”

துறவி சிரித்துக்கொண்டே, “உங்கள் பார்வையில் அப்படித்தான் தோன்றும். பரவாயில்லை, அதே கேள்வியை நான் உங்களிடம் இப்போது கேட்கலாம் அல்லவா? ஏனெனில் உங்களிடமும் தற்போது எந்தப் பொருளும் இல்லையே?” என்று கேட்டார்.

வந்தவர் சொன்னார், “நான் உங்களைத் தேடி வந்த விருந்தாளி. இங்கு சிறிது நேரம் மட்டுமே இருப்பேன். அதனால் நான் எதையும் கொண்டு வரவில்லை''

துறவி அப்போது சொன்னார், “உங்களைப்போலத்தான் நானும் இவ்வுலகிற்கு விருந்தாளியாக வந்திருக்கிறேன். நானும் சிறிது காலம்தான் இங்கே இருப்பேன். எனவே தேவையில்லாத பொருட்கள் எனக்கு எதற்கு?”

18 November 2020, 14:26