தேடுதல்

Vatican News
தீப்பெட்டியில் உரசியதால் பற்றியெரியும் தீக்குச்சி தீப்பெட்டியில் உரசியதால் பற்றியெரியும் தீக்குச்சி 

விதையாகும் கதைகள் : தலைகனம் தரும் தவிப்பு

'உனக்குத் தலைக்கனம் அதிகம். அதனால், சும்மா இருக்கும் என்னிடம், வலிய வந்து உரசிப் பார்க்கிறாய். எரிந்துபோகிறாய்' என்று, தீப்பெட்டி, தீக்குச்சியிடம் சொன்னது.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பலநாளாக கேட்கவேண்டும் என்று எண்ணியிருந்த கேள்வியை, தீக்குச்சி, அன்று தீப்பெட்டியிடம் கேட்டது: 'நாம் இரண்டு பேரும் உரசுகிறோம். ஆனால், நான் மட்டும் பற்றி எரிகிறேனே, ஏன்?', என்று தீக்குச்சி கேட்டது.

'உனக்குத் தலைக்கனம் அதிகம். அதனால், சும்மா இருக்கும் என்னிடம், வலிய வந்து உரசிப் பார்க்கிறாய். எரிந்துபோகிறாய்' என்று தீப்பெட்டி பதில் சொன்னது.

தலைகனம் மிகுந்தால், அந்த தலைகனத்துடன் மற்றவர்களை உரச விழைந்தால், தணலாகித் தவிக்க வேண்டியிருக்கும். தணிந்தால், பணிந்தால், தவிப்பின்றி வாழமுடியும்.

25 April 2020, 13:44