தேடுதல்

Vatican News
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் செல்லும் சாலை கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் செல்லும் சாலை  (AFP or licensors)

நேர்காணல் – பயங்கரவாதத்தால் தாக்கப்பட்டுள்ள இலங்கை

இலங்கையில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள், அமைதி மற்றும் மனித சமுதாயத்தின் மீது நடத்தப்பட்டவையாகும். இவை முற்றிலும் சாத்தானின் குணங்களை வெளிப்படுத்தும் செயல்கள். இவை, மிகக் கொடிய தீமையான மற்றும் தெய்வநிந்தனைச் செயல்களாகும். ஏனெனில் இவை இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நாளன்று நடத்தப்பட்டுள்ளன – ஆசிய கத்தோலிக்கத் தலைவர்கள்

மேரி தெரேசா - வத்திக்கான்

இயேசுவின் உயிர்ப்பு, கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆணிவேர். இப்பெருவிழா திருவழிபாடுகளின்போது இலங்கையில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாத குண்டுவெடிப்புகள், உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, தென் கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, மியன்மார், தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகள் உட்பட, உலகின் ஏறத்தாழ எல்லா நாடுகளின் சமயத் தலைவர்கள், தங்களின் கடும் அதிர்ச்சி மற்றும் வேதனையைத் தெரிவிக்கும் கடிதங்களை, இலங்கை ஆயர்களுக்கும், அரசுத் தலைவருக்கும் அனுப்பியுள்ளனர். தங்களின் செபம் நிறைந்த ஒருமைப்பாட்டுணர்வையும் இத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இக்கொடூர நிகழ்வு குறித்து, நீர்கொழும்புவில் பணியாற்றும் கிளேரிசியன் துறவு சபை அருள்பணி கான்ஸ்ட்டைன் அவர்கள், தொலைபேசி வழியாக வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு தெரிவித்த தகவல்கள் இதோ..

நேர்காணல் – பயங்கரவாதத்தால் தாக்கப்பட்ட இலங்கை
25 April 2019, 14:10