தேடுதல்

ஹெய்டி குழந்தைகள் ஹெய்டி குழந்தைகள்   (AFP or licensors)

ஹெய்ட்டியில் உதவிப் பொருள்களை கடத்தும் வன்முறைக் கும்பல்!

குழந்தைகளுக்கான அத்தியாவசிய உயிர்காக்கும் பொருட்களை சூறையாடுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் மற்றும் மனிதாபிமான அணுகல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் : Maes

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இரண்டு நாட்களுக்கு முன்பு, 17 யுனிசெஃப் கொள்கலன்களில் ஒன்று, ஹைட்டியின் Port-au-Prince- இன் முக்கிய துறைமுகத்தில் கொள்ளையடிக்கப்பட்டது என்றும், அதில் தாய், பிறந்த குழந்தை மற்றும் பிற குழந்தைகள் உயிர்வாழ்வதற்குத் தேவையான அத்தியாவசிய உதவிப் பொருள்கள் இருந்தன என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பு, ஆயுதம் தாங்கிய குழுக்கள் நகரின் முக்கிய துறைமுகத்தை சோதனையிட்டன என்றும், நாடு வீழ்ச்சியை நெருங்கும்  இவ்வேளையில், இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பது மிகுந்த கவலை அளிக்கிறது என்றும் கூறும் அந்நிறுவனம், தற்போது வரை ​​260 மனிதாபிமான உதவிகள் நிறைந்த கொள்கலன்கள் துறைமுகத்தில் ஆயுதக் குழுக்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கவலை தெரிவிக்கிறது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஹெய்டி நாட்டிற்கான யுனிசெஃப் பிரதிநிதி Bruno Maes அவர்கள், சிதைந்து வரும் நல அமைப்பில் குழந்தைகளுக்குரிய முக்கிய நலம் சம்மந்தமான பொருட்களைப் பறிப்பது அவர்களின் உரிமைகளை மீறுவதாகும் என்றும், குழந்தைகளுக்கு இந்தப் பொருள்கள் மிகவும் தேவைப்படும் முக்கியமான தருணத்தில் இந்தச் சம்பவம் நிகழ்கிறது என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் குழந்தைகளுக்கான அத்தியாவசிய உயிர்காக்கும் பொருட்களை சூறையாடுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், மனிதாபிமான அணுகல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் Maes

ஹெய்ட்டியில் நிலவும் பாதுகாப்பின்மை காரணமாக நல வசதிகளை மூடுவது குழந்தைகளுக்கு ஓர் ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்றும், அங்கு மூடப்பட்டுள்ள ஒவ்வொரு நல மையமும் ஆபத்தில் இருக்கும் உயிர்களுக்கு அத்தியாவசிய மருத்துவ பராமரிப்பு மறுக்கப்படுகிறது என்பதையே காட்டுகிறது என்றும் சுட்டிக்காட்டினார் Maes

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 March 2024, 15:14