தேடுதல்

காங்கோவில் புலம்பெயரும் மக்கள் காங்கோவில் புலம்பெயரும் மக்கள்  (ANSA)

காங்கோ கிழக்கு நகரில் 135,000 பேர் புலம்பெயர முயற்சி

காங்கோவின் மோதல்களால் ஒரு இலட்சம் வீடுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள், 267 மருத்துவ மையங்கள், பெருமளவான விவசாய நிலங்கள் அழிவு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கு மாவட்டத்தில் மோதல்களால் பதட்ட நிலைகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கும், மனிதாபிமான உதவிகள் இடம்பெறவும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளது ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பு.

UNHCR என்னும் ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பு காங்கோவின் இன்றைய நிலைகள் குறித்து கவலையை தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பல ஆண்டுகளாக ஆயுதம் தாங்கிய குழுக்களின் தாக்குதலால் பாதிப்புக்களை அனுபவித்துவரும் காங்கோவின் கிழக்குப்பகுதி, அண்மை மோதல்களினால் மேலும் துன்பங்களையும், பதட்ட நிலைகளையும் அனுபவித்து வருவதாகத் தெரிவிக்கிறது.

காங்கோவின் கிழக்குப்பகுதி நகரிலிருந்து ஒரு இலட்சத்து முப்பத்தைந்தாயிரம் பேர் புலம்பெயர்ந்தவர்களாக மாறியுள்ளதாகவும், அனைத்து மோதல்களிலும் பலிகடாக்கள் ஆக்கப்பட்டு துன்பங்களை அனுபவிப்பது அப்பாவி பொதுமக்களே எனவும் தெரிவிக்கிறது UNHCR அமைப்பு.

காங்கோவின் மோதல்களால் ஒரு இலட்சம் வீடுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள், 267 மருத்துவ மையங்கள் மற்றும் பெருமளவான விவசாய நிலங்கள் அழிவுக்குள்ளாகியுள்ளன எனக் கூறும் ஐ.நா.வின் அகதிகள் அமைப்பு, ஏறக்குறைய 20 இலட்சம் மக்கள், அதிலும் 60 விழுக்காட்டினர் குழந்தைகள், வெளியுதவித் தேவைப்படுபவர்களாக இருக்கிறார்கள் எனக் கவலையை வெளியிடுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 February 2024, 15:10