தேடுதல்

உக்ரைன் குழந்தைகள் உக்ரைன் குழந்தைகள்   (AFP or licensors)

உக்ரைனில் 15 இலட்சம் குழந்தைகளுக்கு மனநிலை பாதிக்கும் ஆபத்து!

2023 -ஆம் ஆண்டில், யுனிசெஃப் மற்றும் அதன் துணைவர்கள் உக்ரைனில் உள்ள 25 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கு மனநலம் மற்றும் உளவியல் ஆதரவுக்கான அணுகலை வழங்கியுள்ளனர்: யுனிசெஃப் அறிக்கை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உக்ரைனில் 15 இலட்சம் குழந்தைகள் மனநலப் பிரச்சினைகளுக்கு உள்ளாகும் ஆபத்தில் இருப்பதாக, பிப்ரவரி 28 இப்புதனன்று வெளியிட்டுள்ள அறிகையொன்றில் தெரிவித்துள்ளது அந்நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம்.

Lviv நகரில் உள்ள யுனிசெஃப்-ஆதரவு நலப் பாதுகாப்பு குழுமம், மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மனநலம் மற்றும் உளவியல் ஆதரவு பற்றிய ஆதார அடிப்படையிலான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை வழங்கியுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டில், யுனிசெஃப் மற்றும் அதன் துணைவர்கள் உக்ரைனில் உள்ள 25 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கு மனநலம் மற்றும் உளவியல் ஆதரவுக்கான அணுகலை வழங்கியுள்ளனர் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

மேலும் புலம்பெயர்ந்தோரைப் பராமரிக்கும் நாடுகளில், 13 இலட்சத்திற்கும் அதிகமான உக்ரைன் குழந்தைகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கு யுனிசெஃப் மற்றும் அதன் துணைவர்கள் மன மற்றும் உளவியல் சுகாதார ஆதரவை வழங்கியுள்ளதாகவும் அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 February 2024, 14:36