தேடுதல்

துயரத்தின் பிடியில் காசா குழந்தைகள் துயரத்தின் பிடியில் காசா குழந்தைகள்  

போரால் இறக்கும் காசா குழந்தைகள்!

ஹமாசுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல் தடையின்றித் தொடர்கிறது மற்றும் இப்போது காசா பகுதியின் தெற்கில் தாக்குதல் தொடங்கியுள்ளது : Jason Lee

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலகத் தலைவர்கள் இப்போதே போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மணி நேரமும், உடைந்த அரசியலுக்கான விலையை இன்னும் அதிகமான குழந்தைகள் செலுத்தி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார் பாலஸ்தீன பகுதிக்கான Save the Children எனப்படும் உலகக் குழந்தைகள் நல அமைப்பின் இயக்குநர் Jason Lee.

நவம்பர் 3, இஞ்ஞாயிறன்று, போரிடும் தரப்புகளுக்கு இடையே ஒரு வார போர்நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தான் காசாவின் தெற்குப் பகுதியில் இருந்ததாகவும், அங்குக் குழந்தைகளும் அவர்களது குடும்பங்களும் பாதுகாப்பிற்காக ஏங்கித் தவிப்பதாகவும், ஆனால் காசாவில் எங்கும் பாதுகாப்பான இடம் இல்லை. எங்கும் செல்வதற்கு இடமில்லை என்றும் தனது அறிக்கையொன்றில் கூறியுள்ளார் Lee.

அங்குள்ள குடும்பங்கள் மீண்டும் ஒருமுறை, சிறு சிறு பகுதிகளுக்கு வலுக்கட்டாயமாக இடம்பெயருமாறு இஸ்ரேலிய அதிகாரிகளால் எச்சரிக்கப்படுகின்றது என்றும், அத்தகைய பகுதிகள் யாவும் பாதுகாப்போ அல்லது திரும்பி வருவதற்கான உத்ரவாதமோ இல்லாதவை என்றும் தேவையான அளவிற்கு உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாதவை என்றும் கூறினார் Lee.

காசாவின் தெற்கில் உள்ள ஒரு நகரமான கான் யூனிஸில் தரைப்படை இராணுவ நடவடிக்கைகள் தொடங்கியதால், காசாவிலுள்ள முழு குழந்தை சமூகமும் எங்கும் பாதுகாப்பாக செல்ல முடியாத நிலையில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார் Lee

மேலும், அங்குப் பொதுமக்கள் இஸ்ரேலியப் படைகளால் பாதுகாப்புக்காக இடம்பெயரச் சொல்லப்பட்டது என்றும், ஆனால் தற்போது அப்பகுதி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்றும் தனது கவலையை வெளிப்படுத்தினார் Lee.

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி போர் தொடங்கியதில் இருந்து காசாவில் 7,112 பேர் உட்பட 16,248 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர் மற்றும் குண்டு வீசப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 December 2023, 15:07