தேடுதல்

ஏமனில் கால் நடைகளும் உணவின்மையால் பாதிக்கப்பட்டுள்ளன. ஏமனில் கால் நடைகளும் உணவின்மையால் பாதிக்கப்பட்டுள்ளன. 

ஏமனில் பாதிக்கும் மேற்பட்டோர் உணவின்றி வாடுகின்றனர்

உணவு நெருக்கடியால் துன்புறும் ஏமனின் வடபகுதியில் வாழும் மக்களுள் முதலில் குழந்தைகள், கருத்தாங்கிய பெண்கள், முதியோர் ஆகியோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஏமன் நாட்டில் WFP என்னும் உலக உணவு திட்ட நிறுவனம் தன் பொது உணவு உதவி விநியோக முறையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் 22 மனிதாபிமான அமைப்புக்கள் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளன.

ஏமன் நாட்டிற்கான உணவு உதவிகளை நிறுத்துவது அந்நாட்டின் வடபகுதியில் வாழும் 95 இலட்சம் மக்களை பேராபத்திற்கு இட்டுச்செல்லும் என தெரிவிக்கின்றன இந்த அரசுசரா தன்னார்வ அமைப்புக்கள்.

மனிதாபிமான நிதியுதவிகள் உலக அளவில் குறைவுபட்டு வருவதைத் தொடர்ந்து ஏமன் நாட்டிற்கான உணவு உதவிகள் நிறுத்தப்படுவதாக உலக உணவு திட்ட நிறுவனம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, உணவு நெருக்கடியால் துன்புறும் ஏமனின் வடபகுதியில் வாழும் மக்களுள் முதலில் குழந்தைகள், கருத்தாங்கிய பெண்கள், முதியோர் ஆகியோர் பாதிக்கப்பட்டு, சத்துணவின்மைக்கும், உடல்நலக் கேட்டிற்கும், பொருளாதார பதட்ட நிலைகளுக்கும் வழிகோலி, சமூகத்தில் மோதல்கள் உருவாகக் காரணமாகும் என அச்சத்தை வெளியிட்டுள்ளன மனிதாபிமான குழுக்கள்.

WFP என்னும் உலக உணவுதிட்ட நிறுவனத்தின் கூற்றுப்படி, ஏமன் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர், அதாவது, ஏறக்குறைய 1 கோடியே 70 இலட்சம் பேர் உணவின்மை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர், இதில் 22 இலட்சம் பேர் சத்துணவின்றி வாடும் குழந்தைகள், மற்றும், 13 இலட்சம் பேர் கருவுற்ற, மற்றும் பாலூட்டும் பெண்டிர் ஆவர்.

ஏமன் நாட்டிற்கான உணவு உதவிகள் மிகவும் இன்றியமையாதவைகளாக உள்ளன, ஏனெனில், ஏறக்குறைய 61 இலட்சம் பேர் இந்நாட்டில் பஞ்சத்தால் உயிரிழக்கும் நிலைக்கு வெகு அருகில் உள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2023, 15:54