தேடுதல்

குடிநீரை சுமந்து செல்லும் மக்கள் குடிநீரை சுமந்து செல்லும் மக்கள்  (ANSA)

நீர் பற்றாக்குறையால் அதிகம் பாதிக்கப்படும் சிறார்

நீர் பற்றாக்குறை, பாதிப்படைந்த அசுத்தமான நீர், போன்றவற்றால், மூளை, நுரையீரல், நோயெதிர்ப்பு அமைப்பு, பிற முக்கிய செயல்பாடுகளின் ஆரோக்கியமின்மை மற்றும் வளர்ச்சியின்மை குறைபாட்டினால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்

மெரினா ராஜ் – வத்திக்கான்

கால நெருக்கடியால் உலகளவில் மூன்றில் ஒரு குழந்தை பாதிக்கப்படுகின்றது என்றும், தண்ணீர் பற்றாக்குறையினால் வட ஆப்ரிக்கா மற்றும் தெற்காசியா பகுதிகளில் வாழும் மக்கள் பெரிய அளவிலான மாற்றங்களை எதிர்கிகொள்கின்றனர் என்றும், தெரிவித்துள்ளது யுனிசெஃப் அமைப்பு.

நவம்பர் 13  திங்கள் கிழமை வெளியிட்ட தகவல்களின்படி அதிக அல்லது மிக அதிக அளவு தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையானது காலநிலை மாற்றத்தினால் மிகவும் மோசமான நிலைமையை எதிர்கொள்கின்றது என்றும் தெரிவித்துள்ளது.

நீர் இருப்பு குறைதல், போதிய குடிநீர் இன்மை,  ஆரோக்கியமான நலவாழ்வின்மை ஆகியவற்றின் அதிகப்படியான தாக்கமானது அப்பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கையை சவாலுக்கு உட்படுத்தியும், சிறார்களுக்கு உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தியும் பெரிய ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது யுனிசெஃப்.

நீர் பற்றாக்குறை, பாதிப்படைந்த அசுத்தமான நீர், போன்றவற்றால், மூளை, நுரையீரல், நோயெதிர்ப்பு அமைப்பு, பிற முக்கிய செயல்பாடுகளின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியின்மை குறைபாட்டினால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்றும், காற்று மாசுபாட்டால் பெரியவர்களை விட குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் யுனிசெஃஒப் இயக்குனர் கேத்தரின் ரேச்சல்.

UNICEF குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ரேச்சல் அவர்கள், சமூகப்பணிகள், ஒவ்வொரு குழந்தையும் சுற்றுச்சூழல் பாதுகாவலராக இருத்தல், நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு ஒப்பந்தங்களுக்கு மதிப்பளித்தல் வெப்ப உமிழ்வைக் குறைத்தல் போன்றவற்றையும் நினைவுகூர்ந்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2023, 15:32