தேடுதல்

பொருளாதார நெருக்கடிக்கு எதிராகப் போராட்டம் (கோப்புப் படம்) பொருளாதார நெருக்கடிக்கு எதிராகப் போராட்டம் (கோப்புப் படம்)  (ANSA)

இராஜபக்சேக்கள் குற்றவாளிகள் என இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

கடுமையான நிதி நெருக்கடி, உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பற்றாக்குறை காரணமாக இலங்கை மக்கள் அனைவரும் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டதால் கோத்தபயவின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இலங்கையில் ஏற்பட்ட மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இராஜபக்சேக்கள் குற்றவாளிகள் என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது யூகான் செய்தி நிறுவனம்.

இரண்டு முன்னாள் அரசுத்தலைவர்கள் உட்பட வலிமை வாய்ந்த இராஜபக்சே சகோதரர்கள் பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டதன் மூலம் அந்நாட்டின் மோசமான நிதி நெருக்கடியைத் தூண்டியதற்காக, குற்றவாளிகள் என்று இலங்கையின் உச்ச நீதிமன்றம் நவம்பர் 14 இச்செவ்வாய்யன்று, இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

முன்னாள் அரசுத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பொருளாதாரத்தை தவறாகக் கையாளுதல் அல்லது செயலற்ற தன்மை, மற்றும், மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறி நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம்" என்று TISL-ன் வழக்கறிஞர் Nadishani Perera அவர்கள், AFP செய்தியிடம் கூறியதாகவும் யூகான் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மனுதாரர்கள் பொதுமக்களின் நலன் கருதி நீதிமன்றத்திற்கு வந்து தங்களுக்கு இழப்பீடு கோரவில்லை என்பதால், மனுதாரர்களுக்கு ஏற்படும் செலவுகளைத் தவிர வேறு இழப்பீடு வழங்க உத்தரவிட நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் TISL அமைப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது அச்செய்தி நிறுவனம்.

Transparency International Sri Lanka (TISL) என்ற ஊழல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஏனைய நான்கு செயற்பாட்டாளர்களினால் முன்னாள் அரசுத் தலைவர்களான கோத்தபய இராஜபக்சே மற்றும் மகிந்த இராஜபக்சே உள்ளிட்ட உயர்மட்ட முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் அவர்களது இளைய சகோதரரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் இராஜபக்சே, இரண்டு முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்கள் மற்றும் ஏனைய உயர் கருவூல அதிகாரிகளும் அடங்குவர் (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 November 2023, 14:25