தேடுதல்

ஹமாசால் கடத்தப்பட்ட 23 வயது Hersh Golberg - Polin ஹமாசால் கடத்தப்பட்ட 23 வயது Hersh Golberg - Polin 

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள்

இந்துக்கள் முஸ்லீம்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் என யாராக இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள்

மெரினா ராஜ் - வத்திக்கான்

காசாவில் உயிருடன் புதைக்கப்பட்ட 240 மனிதர்கள் குறித்த திருத்தந்தையின் கவனம் மற்றும் அக்கறைக்கு நன்றி என்றும், வெவ்வேறு மதங்களைச் சார்ந்த கடவுளின் பிள்ளைகளாகிய அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டதற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்  ரேச்சல் கோல்ட்பர்க்-போலின் என்னும் கடத்தப்பட்ட இளைஞனின் தாயார்.

அக்டோபர் மாதத் துவக்கத்தில் ஹமாஸால் கடத்தப்பட்டு காசா பகுதியில் உயிரோடு புதைக்கப்பட்ட 240 மனித உயிர்களை மீட்பதற்காக திருத்தந்தை வலியுறுத்தி வந்த நிலையில் கடத்தப்பட்டவர்களில் ஒருவரான ஹெர்ஸ் கோல்ட்பர்க்-போலின் என்னும் 23 வயது இளைஞனின் தாய் காணொளிச் செய்தி ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 7 ஆம் நாள் ரேவ் பாலைவனம் மீதான தாக்குதலின் போது வன்முறையாளர்களால் துன்புறுத்தப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட தன் மகனைப் பற்றிய எந்தவிதமான செய்திகளும் அறியப்படாத நிலையில் மீட்கப்பட்ட 240 மனிதர்களைக் குறித்து திருத்தந்தைக்குத் தன் நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரயேல் பாலஸ்தீனம் வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்து அமைதியை வலியுறுத்திவரும் திருத்தந்தையின் வார்த்தைகள் குறித்து எடுத்துரைத்துள்ள ரேச்சல் அவர்கள், இந்துக்கள் முஸ்லீம்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் என யாராக இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

பிணையக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த மக்களை மீட்பதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ் என்றும், மூவேளை செப உரையின் இறுதியில் போரினால் பாதிக்கப்படும் மக்களையும் குறிப்பாகக் குழந்தைகளையும் நினைவுகூர்ந்து வருகின்றார் என்றும் எடுத்துரைத்துள்ளார் ரேச்சல்.

ஹமாஸால் அக்டோபர் மாத துவக்கத்தில் 260 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்றும், ஆயிரக்கணக்கானோர் கிப்புட்ஜிம் மற்றும் தெருக்களில் கொல்லப்பட்டனர் என்றும் எடுத்துரைத்துள்ள ரேச்சல் அவர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் மாண்போடும் அதிகப்படியான அன்போடும் அவர்கள் வீடுகள் மற்றும் குடும்பங்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 November 2023, 14:04