தேடுதல்

முதியோர் முதியோர்  

முதியோர் வரலாற்று நினைவின் பாதுகாவலர்கள்

முதியோரின் ஒற்றுமை நிறைந்த எடுத்துக்காட்டு அவர்கள் இவ்வுலகிற்கு வழங்கக்கூடிய மிகப்பெரிய நன்மை.

மெரினா ராஜ் – வத்திக்கான்

தாத்தாக்கள் மற்றும் பாட்டிகள் நமது வரலாற்று நினைவின் பாதுகாவலர்கள் என்றும், வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்குபவர்கள், தலைமுறை ஒற்றுமையை ஊக்கிவிப்பவர்கள் என்றும் கூறியுள்ளார் இத்தாலிய யுனிசெஃப் அமைப்பின்  தலைவர் Carmela Pace.

செப்டம்பர் 30 சனிக்கிழமை வெளியிட்ட தகவல்களின்படி வருகின்ற அக்டோபர் மாதம் 2ஆம் நாளை இத்தாலியில் தாத்தாக்கள் மற்றும் பாட்டிகளுக்காக அர்ப்பணித்து கொண்டாட இருப்பதை தெரிவித்து இவ்வாறு கூறியுள்ளார் இத்தாலிய யுனிசெஃப் அமைப்பின்  தலைவர் Carmela Pace.

சிறார்  வளர்ச்சி, மற்றும் முதியோர் பணியில் அக்கறையும் ஈடுபாடு கொண்ட யுனிசெஃப் அமைப்பானது தங்களது வளர்ச்சியிலும், முயற்சியிலும் ஆதரவளித்த யுனிசெஃப் தன்னார்வத் தொண்டர்களான பல தாத்தாக்கள் மற்றும் பாட்டிகளுக்கு நன்றியினையும், தெரிவித்துள்ளது.

முதியோரின் ஒற்றுமை நிறைந்த எடுத்துக்காட்டு அவர்கள் இவ்வுலகிற்கு வழங்கக்கூடிய மிகப்பெரிய நன்மை என்று கூறிய Pace அவர்கள், வரவிருக்கும் ஆண்டுகளில், இளையோர்க்கு ஈடுசெய்ய முடியாத எடுத்துக்காட்டான வாழ்வைக் கொடுப்பதன் வழியாக உதவுகின்றார்கள் என்றும் கூறியுள்ளார்.

அக்டோபர் மாதம் 2ஆம் நாள் இத்தாலியில் சிறப்பிக்கப்பட உள்ள முதியோர் நாளின் போது திரட்டப்படும் நிதியானது கண்ணுக்குத் தெரியாத இலட்சக் கணக்கான பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் நல் வாழ்விற்காகப் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் Pace.

பாதிக்கப்பட்ட பல சிறாருக்குப் பாதுகாப்பான தண்ணீர் மற்றும் போதுமான கவனிப்பை உறுதி செய்வதற்கான யுனிசெஃப் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் சேகரிக்கப்படும் நிதியானது பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் Pace.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 September 2023, 12:27