தேடுதல்

ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஏமன் குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஏமன் குழந்தை   (ANSA)

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்படும் சிறார்

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பின்னடைவை அடைய இருக்கும் சிறாரின் எண்ணிக்கையானது தற்போது 7 உலக நாடுகளில் வாழும் 18 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம்,

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக 2030 ஆம் ஆண்டளவில், ஏறக்குறைய 19 கோடியே 40 இலட்சம் சிறாரில் இரண்டில் ஒருவர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சேவ் த சில்ரன் என்னும் குழந்தைகள் நலப்பாதுக்காப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 16 சனிக்கிழமை வெளியிட்ட தகவல்களின்படி 3கோடியே16 இலட்சம் சிறார் தங்களது ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்க மாட்டார்கள் என்றும், பள்ளிப்படிப்பைத் தொடங்கும் 5 இல் 2 பேர் 10 வயதிற்குள் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை செயல்பாடுகளாக மாற்றவும், குழந்தைகளின் தேவைகள் மற்றும் உரிமைகளை முதன்மைப்படுத்தும் சேவைகள் மற்றும் அமைப்புகளில் முதலீடு செய்யவும், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய தேவையான நிதியுதவியைத் திறக்கவும் பன்னாட்டுத்தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது குழந்தைகள் நலப்பாதுகாப்பு அமைப்பு.

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பின்னடைவை அடைய இருக்கும் சிறாரின் எண்ணிக்கையானது தற்போது 7 உலக நாடுகளில் வாழும் 18 வயதுக்குட்பட்டவர்களின்  எண்ணிக்கையைவிட அதிகம் என்றும், நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான உச்சிமாநாட்டிற்காக அடுத்த வாரம் கூடும் உலகத் தலைவர்கள் இதற்காக அவசர முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது அவ்வமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2023, 11:43