தேடுதல்

ஏமன் நாட்டிலுள்ள குழந்தைகள் ஏமன் நாட்டிலுள்ள குழந்தைகள்   (ANSA)

முதன்முதலாக, குழந்தைகள் உரிமைகளுக்கான ஐ.நா.குழுவின் அறிக்கை

உலகச் சுற்றுச்சூழல் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு அரசுகள் அனைத்தும் துரிதமாக செய்லபடவேண்டும் : ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் David Boyd

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

முதன்முறையாக, குழந்தைகளின் உரிமைகளுக்கான ஐ.நா குழு, குழந்தைகளின் உரிமைகள் பற்றிய ஐ.நா. ஒப்பந்தத்தின் கீழ் மாநிலங்களின் கடமைகள் பற்றிய விரிவான விளக்கத்தை அளித்து, தூய்மையான, நலமான மற்றும் நிலையான சூழலுக்கான குழந்தைகளின் உரிமையை வெளிப்படையாக உறுதிப்படுத்தியுள்ளது.

பொதுவிதி  எண். 26 என்பது, குழந்தைகளின் உரிமைகளைத் தீங்கு விளைவிக்காமல் பாதுகாப்பதற்கு மட்டுமல்ல, இன்றைய மாநிலங்களின் செயல்கள் அல்லது நடவடிக்கையின்மை காரணமாக எதிர்காலத்தில் அவர்களின் உரிமைகள் மீறப்படுவதற்கும் மாநிலங்களே பொறுப்பு என்பதையும் அவ்வுரிமையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள குழந்தைகளின் உரிமைகளுக்கான ஐ.நா குழுவின் உறுப்பினர் Philip Jaffé அவர்கள், உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தியுள்ளனர் என்றும், இந்தப் பூமியையும் அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு தங்கள் நாட்டு அரசுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

இந்தப் புதிய பொதுக் கருத்து, இப்புவியிலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தூய்மையான, நலமான மற்றும் நிலையான சூழலில் வாழ உரிமை உண்டு என்பதை அங்கீகரிப்பதில் ஒரு முக்கிய படியை குறிக்கிறது என்றும்,  உலகச் சுற்றுச்சூழல் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு அரசுகள் அனைத்தும் துரிதமாக செய்லபடவேண்டுமென மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் David Boyd அவர்களும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 August 2023, 14:31