தேடுதல்

பாதிக்கப்பட்ட Jenin  பகுதி பாதிக்கப்பட்ட Jenin பகுதி  

இஸ்ரயேலில் பாதிக்கப்படும் சிறார் மற்றும் பெண்கள்

ஆபத்தில் இருக்கும் குழந்தைகளைக் காப்பாற்றவும், அவர்களுக்கு எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கவும் 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றது Save the Children பன்னாட்டு அமைப்பு.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஜெனினில் இஸ்ரேலிய பாதுகாப்புப்படை நடவடிக்கையின் போது சிறார் உட்பட பல பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும்,  பொதுமக்களுக்கு  நீர், உணவு, மற்றும் மின்சாரம் கிடைப்பதில் இடையூறுகளும், சாலை மற்றும் வீடுகள் இடிக்கப்படுவது அதிகமாகி வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார் Save the Children இயக்குநர் ஜேசன் லீ.

மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்கள் மற்றும்  தரைப்படைகளின் பயன்பாடு தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் 2023 ஆம் ஆண்டில் ஏற்பட்டுள்ள பாலஸ்தீனிய மக்கள் இறப்பு, படுகாயங்களின் எண்ணிக்கை கடந்த 2022ஆம் ஆண்டை விட அதிகமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார் பாலஸ்தீனப் பகுதிகளுக்கான Save the Children இயக்குநர் ஜேசன் லீ.

உடனடியாக போர் மற்றும் மோதல்களை நிறுத்தவும், பன்னாட்டு மனிதாபிமான சட்டத்தை மதிக்கவும், வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைத்து சிறார் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மனிதாபிமான அணுகலை உறுதிப்படுத்தவும், Save the Children என்னும் பன்னாட்டு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.  

சிறார் மீண்டும் வன்முறைக்கு ஆளாகி, நடந்துகொண்டிருக்கும் மோதல்களால் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வலியுறுத்தும் அவ்வமைப்பு, பகைமையை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுப்பது, சிறார் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை உறுதி செய்வது அவசியம் என்றும் கூறியுள்ளது.

சேவ் தி சில்ட்ரன் அமைப்பு, பெண்கள், சிறார் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வன்முறை மனஅழுத்தம் போன்றவற்றை சமாளிக்க உளவியல் மற்றும் மனநல ஆதரவையும்,  உடனடி மருத்துவம், உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிதி உதவியையும் வழங்கி வருகின்றது.

ஆபத்தில் இருக்கும் குழந்தைகளைக் காப்பாற்றவும், அவர்களுக்கு எதிர்காலத்திற்கு உறுதி அளிக்கவும் 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வரும் பன்னாட்டு அமைப்பான Save the Children, அண்மைய நாட்களில், மூன்று சிறார்கள் உட்பட பத்து பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதற்கு தன் வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 July 2023, 14:55