தேடுதல்

மலேரியா தடுப்பு மருந்து பெறும்  கென்யா குழந்தை  மலேரியா தடுப்பு மருந்து பெறும் கென்யா குழந்தை   (AFP or licensors)

12 ஆப்ரிக்க நாடுகளுக்கு மலேரியா தடுப்பு மருந்துகள்

28 நாடுகள் மலேரியா தடுப்பு மருந்துக்களுக்கு விண்ணப்பிக்க, உலக நலவாழ்வு அமைப்புக்கள் 12 நாடுகளுக்கே தடுப்பு மருந்துகளை வழங்கத் துவங்கியுள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மலேரியாவிற்கு எதிரான 1கோடியே 80 இலட்சம் தடுப்பு மருந்துகள் ஆப்ரிக்காவின் 12 நாடுகளில் விநியோகிக்கப்பட்டு வருவதாக உலக நலவாழ்வு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

2023க்கும் 2025க்கும் இடைப்பட்டக் காலத்தில் இத்தடுப்பு மருந்துகள் கானா, கென்யா, மலாவி, பெனின், புர்கீனோ பாசோ, புருண்டி, கேமரூன், காங்கோ குடியரசு, லிபேரியா, நைஜர், சியாரோ லியோன், உகாண்டா ஆகிய நாடுகளில் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

ஆப்ரிக்காவில் மரணங்களுக்கு, குறிப்பாக குழந்தைகள் மரணங்களுக்கு  முக்கிய காரணங்களுள் ஒன்றாக இருக்கும் மலேரியாவைக் கட்டுப்படுத்த இந்த தடுப்பு மருந்துகள் உதவும் என உரைக்கும் குழந்தைகளுக்கான நிதி அமைப்பான UNICEF மற்றும் உலக நலவாழ்வு அமைப்பான WHO ஆகியவை தெரிவித்துள்ளன.

2019 ஆம் ஆண்டிலிருந்து கானா, கென்யா மற்றும் மலாவியைச் சேர்ந்த 17 இலட்சம் குழந்தைகளுக்கு மேல் தடுப்பு மருந்துக்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறைந்தபட்சம் 28 நாடுகள் மலேரியா தடுப்பு மருந்துக்களுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், உலக நலவாழ்வு அமைப்புகள் தற்போது 12 நாடுகளுக்கு உடனடியாக தடுப்பு மருந்துகளை வழங்கத் துவங்கியுள்ளன.

ஆப்ரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் மலேரியாவால் 5 வயதிற்குட்பட்ட சிறார் ஏறக்குறைய 5 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். உலக அளவில் மலேரியாவால் இடம்பெறும் மரணங்களுள் 95 விழுக்காடு ஆப்ரிக்காவில் இடம்பெறுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2023, 14:05