தேடுதல்

உக்ரைன் குழந்தைகள் உக்ரைன் குழந்தைகள்   (AFP or licensors)

உக்ரைனில் 1,57,000 டோஸ் போலியோ தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன

6,50,000-க்கும் மேற்பட்ட போலியோ தடுப்பூசிகள் மற்றும் 35,200 டோஸ் ஒருங்கிணைந்த தட்டம்மை-சளி-ரூபெல்லா தடுப்பூசிகள் ஏற்கனவே 2023-ஆம் ஆண்டளவில் வழங்கப்பட்டுள்ளன : யுனிசெஃப் நிறுவனம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உக்ரைனின் தேசிய தடுப்பூசி திட்டத்தை ஆதரிப்பதற்காக 1,56,960 டோஸ் போலியோ தடுப்பூசிகளை (IPV) அந்நாட்டில் உள்ள குழந்தைகளைக் கொடிய நோயிலிருந்து பாதுகாப்பதற்காக வழங்கியுள்ளதாகக் கூறியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள உக்ரைனுக்கான யுனிசெஃப் பிரதிநிதி முராத் சாஹின் அவர்கள், போர் மற்றும் அதிகப்படியான மக்கள் இடப்பெயர்வு காரணமாக, அவர்கள் வழக்கமான தடுப்பூசிகளை பெறும் வாய்பை இழக்கிறார்கள் என்றும், அதனால்தான், இழந்த தடுப்பூசிகளை மீண்டும் வழங்குவது மிகவும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.

தடுப்பூசி வழியாகப் போலியோ வைரஸிலிருந்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும், இது தொற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது என்றும்,  உக்ரைனில் நிகழ்ந்து வரும் போரின் சூழலில் இது மிகவும் முக்கியமானது என்றும் வலியுறுத்தியுள்ளார் உக்ரைனுக்கான உலக நல அமைப்பின் (WHO) பிரதிநிதி Jarno Habicht.

கடினமானச் சூழ்நிலைகள் நிலவியபோதிலும், அந்நாட்டின் நல அமைப்பு தொடர்ந்து செயல்படுகிறது என்றும், நல அமைச்சகம் மற்றும் அதன் தோழமை சமூகங்கள் மற்றும் தனிநபர்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்காகத் தடுப்பூசிகள் உட்பட அத்தியாவசியப் பணிகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய அயராது உழைத்து வருகின்றனர் என்றும் உரைத்துள்ளார் Habicht.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், 5,43,000 டோஸ் வாய்வழி போலியோ தடுப்பூசிகளையும் 110, 160 டோஸ் போலியோ தடுப்பூசிகளையும் உக்ரேனிய குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக வழங்கியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 June 2023, 14:48