தேடுதல்

உக்ரைன் குழந்தைகள் உக்ரைன் குழந்தைகள்   (Courtesy of the Hungarian Charity Service of the Order of Malta)

உக்ரைன் நாட்டிற்கு 1,20,000 தடுப்பூசிகளை வழங்கியுள்ளது UNICEF

2022-2023 -ஆம் ஆண்டுகளில், போலியோ, தட்டம்மை, சளி, ரூபெல்லா மற்றும் காசநோய் ஆகியவற்றுக்கு எதிராக 21 இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை யுனிசெஃப் நிறுவனம் உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வழக்கமான தடுப்பூசி திட்டங்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக UNICEF நிறுவனத்திடமிருந்து 1,20,000 டோஸ் டிப்தீரியா-டெட்டனஸ்-பெர்டுசிஸ் (DTP) தடுப்பூசியை உக்ரைன் பெற்றுள்ளது என்று ஜூன் 28, இப்புதனன்று கூறியுள்ளது அந்நிறுவனம்

இதுபற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள உக்கிரைன் நாட்டிற்கான யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதி Murat Sahin அவர்கள், போர் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளால் தீவிரமடைந்துள்ள சுகாதார சீர்கேடுகளின் மத்தியில் உக்ரைன் மக்கள் நிலையான பாதுகாப்பைக் கொண்டிருப்பது மிகவும் அவசியமானது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

DPT தடுப்பூசி குழந்தைகளுக்குக் கடுமையான தொற்று நோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது என்றும்,  பெர்டுசிஸ், டிப்தீரியா மற்றும் டெட்டனஸ் ஆகியவை குழந்தைகளின் உடல்நலத்திற்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார் Sahin

2022-2023 ஆண்டுகளில், போலியோ, தட்டம்மை, சளி, ரூபெல்லா மற்றும் காசநோய் ஆகியவற்றுக்கு எதிராக 21 இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை யுனிசெஃப் நிறுவனம் உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 June 2023, 15:24