தேடுதல்

பாலஸ்தீன நலப்பணியாளர்கள் பாலஸ்தீன நலப்பணியாளர்கள்  

புனித பூமியில் நலப் பணியாளர்கள் பாதுகாப்பாக இல்லை : MAP அமைப்பு

2023-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 22 குழந்தைகள் உட்பட 143 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்ட West Bank குடியேறியவர்களாலும் கொல்லப்பட்டுள்ளனர்: பாலஸ்தீன சுகாதார அமைச்சகம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

புனித பூமியில் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் குடியேற்றத்தாரர் இடையே நிகழ்ந்துவரும் அண்மைய வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில் நலப் பணியாளர்களைப் பாதுகாக்க வேண்டுமென பாலஸ்தீனியர்களுக்கான மருத்துவ உதவி அமைப்பு (Medical Aid for Palestinians: MAP) அழைப்பு விடுத்துள்ளது.

ஜூன் 19, திங்களன்று, இஸ்ரேலிய இராணுவம் ஜெனின் நகருக்குள் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டதில் ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டும், 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தவேளை இத்தகையதொரு அழைப்பை விடுத்துள்ளது MAP அமைப்பு

இதுகுறித்து தனது கருத்தை வெளியிட்ட,  MAP அமைப்பின் வழக்கறிஞர் மற்றும் பிரச்சார மேலாளர் Aseel Baidoun அவர்கள், West Bank-இல் சட்டவிரோதமாக வாழ்ந்து வரும் இஸ்ரேலியக் குடியேற்றத்தாரர்களால்தான் இம்மாதிரான வேதனை தரும் சம்பவங்கள் நடப்பது வழக்கமான நிகழ்வாகிவிட்டது என்று வேதனையைப் பதிவுசெய்துள்ளார்.

இந்தத் தாக்குதல்களைத் தடுக்க இஸ்ரேலிய இராணுவம் எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், காயமடைந்தவர்களுக்கு உதவ முன்வரும் துணிச்சல் கொண்ட துணை மருத்துவர்களை அது தீவிரமாகத் தடுக்கிறது அல்லது தாக்குகிறது என்றும் கூறியுள்ள Baidoun அவர்கள், West Bank-இல் நலப் பணியாளர்கள் பாதுகாப்பாக இல்லை என்பதால், இந்நிலைக்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.  

2023-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 22 குழந்தைகள் உட்பட 143 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளாலும் West Bank-இல் குடியேறியவர்களாலும் கொல்லப்பட்டுள்ளதாகப் பாலஸ்தீன நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவிலும் 35 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். West Bank-இல் உள்ள பாலஸ்தீனியர்களுக்குக் கடந்த ஆண்டை விஞ்சும் அளவிற்கு இவ்வாண்டு மிகவும் மிகவும் ஆபத்தான ஆண்டாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 June 2023, 14:28