தேடுதல்

துயரத்தின் பிடியில் வாழும் குழந்தைகள் துயரத்தின் பிடியில் வாழும் குழந்தைகள்   (AFP or licensors)

காலநிலை மாற்றத் தீர்வுகளுக்கு நிதியளிப்பது அவசியம்

CERI, Plan International, Save the Children அமைப்பு, யுனிசெப் ஆகியவை இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள இப்புதிய அறிக்கையில் இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

முக்கிய உலகளாவிய காலநிலை நிதிகளில் 2.4 விழுக்காடு மட்டுமே குழந்தைகள் உரிமை நடவடிக்கைகளுக்கு ஆதரவாகப்  பயன்படுத்தப்படுகிறது என்றும், UNICEF நிறுவனத்தின் காலநிலை இடர் அளவீட்டின் படி, 100 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் காலநிலை நெருக்கடியின் விளைவுகளால் மிகவும் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CERI, Plan International, Save the Children அமைப்பு, யுனிசெப் ஆகியவை இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள இப்புதிய அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ள Barbados-இன் UNICEF-க்கான காலநிலை மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர் Maria Marshall, குழந்தைகள்தான் நமது எதிர்காலம், ஆனால், இன்று முடிவெடுப்பவர்களின் செயல்களால் நமது எதிர்காலம் வடிவமைக்கப்படுகிறது என்றும், நமது குரல்கள் கேட்கப்படுவதில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத் தீர்வுகளுக்கு நிதியளிப்பது அவசியம் என்றாலும், இந்தப் பணம் எவ்வாறு முதலீடு செய்யப்படுகிறது என்பது முக்கியம் என்றும், இதில் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கண்ணோட்டங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் இவ்வறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 June 2023, 14:13