தேடுதல்

தற்காலிக தங்குமிடங்களில் மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் மக்கள்  (AFP or licensors)

புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தெற்காசியா யுனிசெஃப்

பாகிஸ்தானில், கடந்த ஆண்டு ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிந்து மாநிலத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு Biparjoy சூறாவளி ஒரு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

Biparjoy புயலினால் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள 6,25,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆபத்தில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால உதவிகளைச் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் தெற்கு ஆசியாவின் யுனிசெஃப் இயக்குனர் Noala Skinner

அதிகமான காற்று, கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலோர மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள வேளையில், அதனைப் பற்றிய ஓர் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் தெற்குஆசியப் பகுதிகளுக்கு பொறுப்பாளரான யுனிசெஃப் இயக்குனர் Noala Skinner

வெள்ள பாதிப்பு அதிகமாக ஏற்பட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு பற்றி ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்த Skinner, புயலின் பாதிப்பிற்கு முன்பே ஏராளமான குழந்தைகள் அப்பகுதியில்  ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

பாகிஸ்தானில், கடந்த ஆண்டு ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிந்து மாநிலத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு Biparjoy சூறாவளி ஒரு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், அவசரகால துயர் துடைப்பிற்கு ஆதரவளிக்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உயிர்காக்கும் பொருட்கள், நீர் சுத்திகரிப்பு கருவிகள், படுக்கை வலைகள், வைட்டமின்கள் போன்றவற்றை பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு அளித்து வருவதாகவும் பெண்கள் மற்றும் சிறாருக்கு சிறப்பு கவனம் செலுத்தி பாதுகாத்து வருவதாகவும்  தெரிவித்துள்ளார் ஸ்கின்னர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 June 2023, 11:50