ஜெருசலேமில் யூத செப ஆலயங்கள் மீது தாக்குதல்
மெரினா ராஜ் - வத்திக்கான்
வன்முறையைத் தவிர்க்க அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டிய நேரம் இது எனவும், குற்றங்கள் அனைவராலும் தெளிவாக கண்டிக்கப்பட்டு நிராகரிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலர் அந்தோணியோ கூட்டரேஸ்.
சனவரி 28 வெள்ளிக்கிழமை இஸ்ரயேல் நாட்டின் WEST BANK ல் உள்ள ஜெனினில் உள்ள யூத செபக்கூடத்திலிருந்து வழிபாடு முடிந்து வெளியே வந்த மக்கள் மீது 21 வயது பாலஸ்தீனியர் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்ட துயரமான செயலுக்கு வருத்தம் தெரிவித்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலர் அந்தோணியோ கூட்டரேஸ் அவர்கள், நாட்டில் வன்முறை அதிகரிப்பது ஆழ்ந்த கவலையைக் கொண்டதாக உள்ளதாகவும் கூறினார்.
இஸ்ரேல் காசா மீது குண்டுவீசி 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஹோலோகாஸ்ட் நினைவு நாளில் நடத்தப்பட்ட இத்தாக்குதல், அண்மை ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்வுகளிலேயே மிகவும் தீவிரமான ஒன்றாகவும் கருதப்படுகின்றது.
ஜெருசலேமில் உச்ச எச்சரிக்கை
ஜெருசலேமில், தாக்குதல் நடந்த இடத்தில், பழைய இஸ்ரயேல் நகருக்கு அருகில் பலர் கண்காணிப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும், பாதிக்கப்பட்டவர்களில் பலரை மருத்துவர்கள் மீட்டுள்ளதாகவும் அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு உதவிய ஆதரவாளர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தைப் பார்வையிட்டு உடனடி நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்