தேடுதல்

வானத்தில் விண்மீன்கள்  வானத்தில் விண்மீன்கள்  

இனியது இயற்கை – விந்தை தரும் விண்மீன்களின் உருவாக்கம்!

விண்மீன்கள் உருவாகும் போதே அவற்றின் இறப்பும், விண்மீன்களின் அளவைப் பொறுத்து அவற்றின் ஆயுள்காலமும் தீர்மானிக்கப்படுகின்றது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நீலநிறப் போர்வையால் போர்த்தப்பட்டிருக்கும் வானத்தில் மின்மினிப் பூச்சிகளாய் ஒளிர்வதுதான் விண்மீன்கள். பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும் இந்தக் கண்கொள்ளாக் காட்சி மனிதரின் மனங்களை நாள்தோறும் வருடுகின்றன. குழந்தை இயேசுவைக் காணவந்த மூன்று ஞானிகளுக்கு வழிகாட்டியதும், அவர்கள் மீண்டும் ஏரோது என்னும் தீயவனிடம் செல்லாது அவர்களை வேறு திசையில் அழைத்துச் சென்றதும் விண்மீன் தான். இவைகளின் உருவாக்கமே ஒரு அழகுதான். அவற்றைக் குறித்துச் சற்று அறிந்துகொள்வோம்

விண்மீன்கள் உருவாக்கம் (Star formation) என்பது அண்டவெளியில் பரவிக்கிடக்கும் மூலக்கூற்று முகில்கள் சுருங்கி அடர்த்தியாகி மின்மப் பந்து போன்ற ஓர் அமைப்பைப் பெறுதல் ஆகும். இதைப் பற்றிய கல்வி வானியலில் ஒரு பகுதியாக அமைகின்றது. விண்மீன்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் அமைந்துள்ள மூலக்கூற்று முகில்களில் (giant molecular clouds) இருந்து எவ்வாறு இளவிண்மீன்களும், விண்மீன்களும், கோள்களும் உருவாகின்றன என்பவை இவற்றில் அடங்குகின்றன. நுண்ணியத் தாதுப்பொருட்கள், மூலகங்கள், வளிமங்கள் என்பன மூலக்கூற்று முகில்களில் காணப்படுகின்றன. விண்மீன்கள் உருவாகும் போதே அவற்றின் இறப்பும் தீர்மானிக்கப்படுகின்றது. விண்மீன்களின் அளவைப் பொறுத்து அவற்றின் ஆயுள்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. சிறிய விண்மீன்கள் குறைந்த ஆயுள்காலமும் பெரிய விண்மீன்கள் அதிக ஆயுள்காலமும் கொண்டுள்ளன. (நன்றி:விக்கிப்பீடியா)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 December 2022, 13:33