தேடுதல்

நீல நிற வானும் கடலும் நீல நிற வானும் கடலும் 

இனியது இயற்கை – வானத்தைப் போல மனம் கொள்வோம்!

சாதி, மதம், இனம் மொழி, நாடு என வேறுபாடின்றி அனைவரையும் ஒரே கொடையின்கீழ் போர்த்திக் காக்கும் வானத்தைப் போல வேறுபாடுகளகற்றி வாழ்வோம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வானம் கடவுளின் படைப்பில் உச்சம். வானத்தில் காணப்படும் விண்மீன்கள், சூரியன், சந்திரன், மேகங்கள் யாவும் மனிதரின் மனதிற்கு நிறை மகிழ்ச்சியை அளிப்பதுடன், கடவுளின் அளப்பரிய படைப்பாற்றலை வெளிப்படுத்துகின்றது. இதன் காரணமாகவே, ‘வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது’ (திபா 19:1) என்றும்,  ‘உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும்  விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் பொருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?’ (திபா 8:3-4) என்று பாடுகிறார் தாவீது. ‘தாரகை நீந்தும் நீலக்கடலடி... தலைக்கு மேலே ஆடுதடி.. தினம் நீளும் வானமடி... நாம் நித்தம் காணும் மாயமடி... நமக்கு நீர்வார்க்கும் கூரையடி’ என்று பாடுகின்றான் கவிஞனொருவன். சாதி, மதம், இனம் மொழி, நாடு என வேறுபாடுகளன்றி யாவருக்கும் ஒன்றாய் இருக்கும் வானத்தைப் போல, மனிதரும் வேற்றுமை அகற்றி ஒற்றுமையாய் வாழ்ந்திட நம்மை அழைக்கும் சமத்துவத்தின் அடையாளமாக அமைகின்றது வானம்.     

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 December 2022, 13:37