தேடுதல்

யூரல் மலை யூரல் மலை  

இனியது இயற்கை. யூரல் மலைகள்

ஏராளமான குகைகள், பிளவுகள், மற்றும் நிலத்தடி ஆறுகளையும் விலைமதிப்பற்ற கனிமக்கற்களையும் கொண்டதாக உள்ள யூரல் மலைப்பகுதிகளில் பெரும்பாலான அளவு ரஷ்ய மக்களே வாழ்கின்றனர்.

மெரினா ராஜ் -வத்திக்கான்

2.500 கிலோமீட்டர் நீளமுள்ள மலைத்தொடரான யூரல், ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் நாடுகளுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளது. யூரல் ஆற்றின் குறுக்கே,  ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களுக்கு இடையிலான இயற்கை எல்லையாகவும், பூமியின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றாகவும். உலகின் மிகப்பெரிய தடையற்ற தாழ்நில பகுதியாகவும் கருதப்படுகின்றது.வடக்கிலிருந்து தெற்கு நோக்கி, ஆர்க்டிக் டன்ட்ரா குளிர்ப்பகுதியிலிருந்து காஸ்பியன் கடலின் பாலைவனங்கள் வரை யூரல் மலைகள் செல்கின்றன.

இந்த மலைத்தொடர் நான்கு நன்கு வேறுபட்ட பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது., டன்ட்ரா என்னும் குளிர்ப்பகுதியால் மூடப்பட்ட துருவப் பிரிவு, வடக்கில், நரோத்னயா என்னும் மிக உயர்ந்த சிகரம், மத்தியில் யூரல்ஸ், அ கனிம வளமான பகுதி, தெற்கில், இணையாக அமைக்கப்பட்ட பல உயரமான முகடுகள் என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. ஏராளமான குகைகள், பிளவுகள், மற்றும் நிலத்தடி ஆறுகளையும் விலைமதிப்பற்ற கனிமக்கற்களையும் கொண்டதாக உள்ள யூரல் மலைப்பகுதிகளில் பெரும்பாலான அளவு ரஷ்ய மக்களே வாழ்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2022, 13:28