தேடுதல்

மலையும் வயலும் மலையும் வயலும் 

இனியது இயற்கை: மண்ணும் மலையும்

மலைகள், உலகத்தின் ‘நீர் கோபுரங்கள்’. நமது பூமியிலுள்ள அனைத்து நன்னீர் வளங்களில், 60 முதல் 80 விழுக்காடு வரை மலைகள்தான் வழங்குகின்றன
  • மேரி தெரேசா: வத்திக்கான்
  • மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
  • காடும் உடைய தரண் (குறள் 742)
  • ஈராயிரம் ஆண்டுகால சங்கத் தமிழில் மலைகளுக்கென்று 350 பாடல்கள் இருப்பதாக குறிப்புகள் சொல்கின்றன. ஆதி மனிதர் மலைகளில் வாழ்ந்தனர். மலை மீது வாழ்ந்த மனிதரின் அறிவும் பரந்த மனமும் எப்படிப்பட்டதென்று கட்டியம் கூறி நிற்கிறது, பறம்பு நாட்டு பாரியின் வரலாறு. பூமியின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு மலைகள் உள்ளன. இவற்றில் ஏறத்தாழ நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வதோடு மட்டுமல்லாமல், விவசாயமும் செய்வதாக தரவுகள் சொல்கின்றன. அது மட்டுமல்ல, உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள், தண்ணீர், உணவு, மற்றும், எரிசக்திக்காக மலைகளைத்தான் நம்பியிருக்கின்றனர். மேலும், அழிந்துவரக்கூடிய பல உயிரினங்களின் வாழ்விடமாகவும் மலைகள் உள்ளன. இக்கால நவீன அறிவியல் சுற்றுச்சூழல் தொகுதிகளாக உள்ள மலைகள், ஆறுகள், காடுகள் போன்றவற்றை தனித்தனிக் கூறுகளாகப் பார்க்கக்கூடிய பார்வையை ஏற்படுத்திவருகின்றன. ஆனால் இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதை, “இயற்கையின் அறிவியலும் பூர்வீக இன மக்களும் உணர்த்திவருகின்றனர். மலைகளில் உள்ள காடுகள் மழையைத் தருவிக்கின்றன, அவை சிற்றோடைகளாக உருவாகி, பின்பு நதிகளாகி அவை செல்லும் பாதையிலுள்ள உயிர்களுக்கு குடிநீரும் உணவும் வழங்கி கனிமங்களைக் கொண்டு பெருங்கடல்களில் சேர்ப்பதால்தான் உயிர்ச்சூழல் இந்த பூமியில் இருக்கிறது. மலைகளும் காடுகளும் தாய் என்றால், பெருங்கடல் பிள்ளை, இந்த இரண்டையும் இணைக்கக்கூடிய தொப்புள் கொடிதான் நதி, இந்தப் புரிதல்தான் பூமியிலுள்ள மலைகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் தொகுதிகளைக் காக்க உதவும். மலைகள்தான் உலகத்தின் ‘நீர் கோபுரங்கள்’ எனவும், நமது பூமியிலுள்ள அனைத்து நன்னீர் வளங்களில், 60 முதல் 80 விழுக்காடு வரை மலைகள்தான் வழங்குகின்றன என்கிற தரவும், மலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. எனவே மண்ணைக் காப்போம், மலைகளைக் காப்போம்  (நன்றி தினத்தந்தி)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2022, 13:40