தேடுதல்

இந்திய மலை இந்திய மலை 

இனியது இயற்கை - கிழக்குத் தொடர்ச்சி மலை

மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் காட்டிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மிகவும் பழமை வாய்ந்தவையாகும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் (Eastern Ghats), இந்தியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டி மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் போல் தொடர்ச்சியாக இல்லாமல், அதாவது தொடர்ச்சியற்ற மலைகளாகக் காணப்படுகிறது. இதன் உயரம் ஏறக்குறைய 1000 மீ முதல் 1500 மீ வரை உள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் காட்டிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த மலைத்தொடர் வடக்கே மேற்கு வங்காளத்தில் தொடங்குகின்றது, பிறகு ஒடிசா, ஆந்திரா வழியாக தமிழ்நாடு வரை பரவியுள்ளது. இதன் சிறு பகுதி கர்நாடக மாநிலத்திலும் உள்ளது.

கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தொடர்ச்சி துண்டிக்கப்பட்டதற்கான முக்கிய காரணம், தீபகற்ப இந்தியாவின் காவேரி, கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா என்ற 4 முக்கிய ஆறுகள் இம்மலைத் தொடர்களின் இடையே பாய்ந்து ஏற்படுத்திய மண் அரிப்பே ஆகும். இம்மலைத்தொடர் வங்காளவிரி குடாவிற்கு இணையாக நீண்டிருக்கிறது.

சவ்வாது மலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, பச்சை மலை, கொல்லி மலை, ஏலகிரி மலை, சமணர் மலை, பர்வத மலை, சித்தேரி ஆகியவை கிழக்கு மலைத்தொடரில் நமக்குத் தெரிந்த பெயர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 August 2022, 14:52