தேடுதல்

தொடரும் காடழிப்பு தொடரும் காடழிப்பு  

இனியது இயற்கை – தொடர்கதையாக நிகழும் காடழிப்பு!

மக்கள் தொகை மற்றும் மக்களின் அத்தியாவசியத் தேவைகள் அதிகரிக்கும்போதெல்லாம் அநியாயமாகப் பலியாவது காடுகள்தாம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மனிதரின் அவசியமான தேவைகளில் ஒன்று தண்ணீர். இதுவே அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ளது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். தண்ணீர் பற்றாக்குறை நாளுக்குநாள் அதிகரிக்க முக்கிய கரணம் காடுகள் அழிந்துகொண்டிருப்பதுதான். மக்கள் தொகை  அதிகரிக்கும்போதும், மக்களின் அத்தியாவசியத் தேவைகள் அதிகரிக்கும்போதும் அநியாயமாகப் பலியாவது காடுகள்தாம். காடுகள் மட்டுமன்றி, மனிதரின் பேராசையினால் நாலாபுறமும் நமது பூமித்தாயும் குத்திக்கிழிக்கப்படுகிறாள். அணைகள் கட்டுகிறோம், மக்களின் தேவைகளுக்காகக் கனிமங்களையும் தாதுக்களையும் எடுக்கிறோம், மக்களின் வசதிக்காக நியூட்ரினோ திட்டத்தைக் கொண்டு வருகிறோம் என்று கூறிக்கொண்டு நமது பூமித்தாயை அழித்தொழிப்பதற்கு ஆயிரம் காரணங்களை அடுக்கிக்கொண்டே போகிறோம். காடழிப்பு என்பது தொடர்கதையாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

நீர்ப்பாசனத் திட்டத்துக்காக 14.3 விழுக்காடும், நீர்மின் நிலையத்துக்காக 0.84 விழுக்காடும், கனிமத் தாதுகள் எடுக்க 0.24 விழுக்காடும், அனல்மின் நிலையத்துக்காக 0.64 விழுக்காடும், மற்ற பயன்பாடுகளுக்காக 2.92 விழுக்காடும் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக Analysis of Forest Diversion in India அமைப்பின், 2019-ஆம் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2022, 14:31