தேடுதல்

கோதுமை அறுவடை கோதுமை அறுவடை 

இனியது இயற்கை - உலகின் நில வளங்கள்

நிலத்தை தீவிரமாக இலாபநோக்கில் பயன்படுத்தும் மனிதன், மண்ணின் வளத்தை அதிகரிப்பதையும் கவனித்துக்கொள்வது அவசியம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

முறையற்ற மற்றும் கட்டுப்பாடற்ற நிலப் பயன்பாடே நில வளங்கள் சீரழிவதற்கும் குறைவதற்கும் முக்கியக் காரணம். தற்போதைய நிலப் பயன்பாடு பெரும்பாலும் உண்மையான ஆற்றல், உற்பத்தித்திறன் மற்றும் நிலப் பயன்பாட்டில் உள்ள தடைகள் மற்றும் அவற்றின் இடம்சார்ந்த பன்முகத்தன்மை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. பல்வேறு மதிப்பீடுகளின்படி, இன்று உலகில் 50 முதல் 80 கோடி மக்கள் பட்டினியால் வாடுகின்றனர், மேலும் உலக மக்கள்தொகை ஆண்டுதோறும் சராசரியாக 9 கோடி மக்களால் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் என்ற கட்டாயம், நில வளங்கள் உட்பட இயற்கை வளங்களில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. விவசாய மற்றும் சுற்றுச்சூழல் வளங்களின் அழிவு மற்றும் சீரழிவு முக்கிய ஆபத்துகளில் ஒன்றாகும். நிலத்தை தீவிரமாகப் பயன்படுத்துவதன் வழியாக, அதிலிருந்து எப்படி அதிகமாக எடுத்துக்கொள்வது என்பதைப் பற்றி சிந்திக்கின்றோமே தவிர, மண்ணின் வளத்தை அதிகரிப்பதையும் கவனித்துக்கொள்வது அவசியம் என்பதை உணர்வதில்லை.

உலகில் அதிக அளவு பயிரிடப்பட்ட நிலங்களைக் கொண்ட நாடுகள் அமெரிக்கா, இந்தியா, இரஷ்யா, சீனா, கனடா. நில வளம் குறைவாக உள்ள நாடுகள் எகிப்து, ஜப்பான். உலகின் நில பயன்பாட்டு உற்பத்தித்திறன் கணிசமாக வேறுபடுகிறது. உதாரணமாக, உலகின் 32% விளைநிலங்களும், 18% மேய்ச்சல் நிலங்களும் ஆசியாவில் குவிந்துள்ளன, இருப்பினும், குறைந்த உற்பத்தித்திறன் காரணமாக, பல ஆசிய நாடுகள் உணவு இறக்குமதியை நம்பியே இருக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 June 2022, 13:10