தேடுதல்

இந்தியாவின் நீளமான உப்பு நீர் ஏரி, சிலிகா இந்தியாவின் நீளமான உப்பு நீர் ஏரி, சிலிகா 

இனியது இயற்கை: இந்தியாவின் நீளமான உப்பு நீர் ஏரி, சிலிகா

ஒடிசா மாநிலத்தில், 1,100 சதுர கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட பரப்பளவைக்கொண்ட சிலிகா ஏரியின் மீன்வளத்தை நம்பி 132 கிராமங்கள் வாழ்கின்றன

மேரி தெரேசா: வத்திக்கான்

இந்தியாவில் 62 மிக முக்கிய ஏரிகள் உள்ளன. அவை, நன்னீர் நீர், உப்பு நீர் ஏரிகள், இயற்கை செயற்கை ஏரிகள், U வடிவில் அல்லது குளம் போன்ற ஏரிகள், எரிமலை வெடிப்பால் உருவான ஏரிகள் என ஆறு வகைப்படும். இந்தியாவின் நீளமான நன்னீர் ஏரி, ஜம்மு-காஷ்மீரிலுள்ள ஊலர் ஏரியாகும். நீளமான உப்பு நீர் ஏரி, ஒடிசா மாநிலத்திலுள்ள சிலிகா Chilika ஏரியாகும். நீளமான சுத்தமான ஏரி இமாச்சல பிரதேசத்திலுள்ள கரேரி ஏரியாகும். மனிதரால் உருவாக்கப்பட்ட நீளமான செயற்கை ஏரி, உத்தர பிரதேசத்திலுள்ள  Govind Ballabh Pant Sagar ஏரியாகும்.

சிலிகா ஏரி

சிலிகா ஏரி (Chilika Lake), இந்தியாவின் கிழக்கு கரை மாநிலமான ஒடிசாவின், பூரி, குர்டா, கஞ்சம் ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ள காயல் ஆகும். கடலினின்று மணல் திட்டுக்களால் பிர்க்கப்பட்ட ஏரிபோன்ற இந்த உப்புநீர்த் தேக்கம், தயா ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கின்ற அதன் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. 1,100 சதுர கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட பரப்பளவைக்கொண்ட சிலிகா ஏரி, இந்தியாவில் Vembanad ஏரிக்கு அடுத்த பெரிய ஏரியாகும். இது, இந்தியாவின் மற்றும், உலகின் மிகப்பெரிய கடற்கரை காயலாகும். இது, யுனெஸ்கோவின் கலாச்சாரப் பாரம்பரியச் சொத்தாகவும் பெயரிடப்பட்டுள்ளது. குளிர் காலத்தில் காஸ்பியன் கடல், Baikal ஏரி, Aral கடல், இன்னும், இரஷ்யா, கஜகஸ்தான், மத்திய மற்றும், தென்கிழக்கு ஆசியா, லடாக் மற்றும், இமாலயப் பகுதிகளிலிருந்து 162க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இக்காயலுக்கு வருகின்றன. இவற்றில் சில பறவையினங்கள், ஏறத்தாழ 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து சிலிகா ஏரிக்கு வருகின்றன. சிலிகா ஏரியை நம்பி, 132 மீனவக் கிராமங்கள் வாழ்கின்றன. இந்த ஏரிப் பகுதியில் மக்களின் குடியேற்றம் அதிகரிப்பதால், இங்கு வாழ்கின்ற, மற்றும், புலம்பெயர்ந்து வருகின்ற எண்ணற்ற பறவையினங்கள், மற்றும், தாவர  வகைகளின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. (உதவி: விக்கிப்பீடியா)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2022, 15:06