தேடுதல்

கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல் கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல்  (© Notice: UNICEF photographs are copyrighted and may not be reproduced in any medium without written permission from authorized)

கைகளை சுத்தமாக வைத்திருப்பது, தொற்றுக்கிருமிகளிலிருந்து....

தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள புதிதாய்ப் பிறந்த குழந்தைகளும், பெருந்தொற்று நோயாளிகளும் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்கின்றனர் - WHO

மேரி தெரேசா: வத்திக்கான்

கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்தல், ஏனையத் தொற்றுக்கிருமிகள் பரவாமல் வாழ்வைக் காப்பாற்றும் என்று, WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் மே 06, இவ்வெள்ளியன்று வெளியிட்ட புதிய ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

கொரோனா பெருந்தொற்றுக்கிருமி, மற்றும் ஏனைய நோய்கள் பரவியிருப்பது, உடல்நலத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன என்றுரைத்துள்ள WHO நிறுவனத்தின் தலைமை இயக்குனர் Tedros Adhanom Ghebreyesus அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்று, உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பல சவால்களையும், இடைவெளிகளையும் உருவாக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

இன்றையக் காலக்கட்டத்தில் உலக அளவில் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நூறு நோயாளிகளில் 7 பேர் வருவாய் அதிகமாக உள்ள நாடுகளிலும், 15 பேர், வருவாய்க் குறைவாயுள்ள, மற்றும், நடுத்தர வருவாயுள்ள நாடுகளிலும் உள்ளனர் என்றுரைத்துள்ள Ghebreyesus அவர்கள், இவர்களில் பெருந்தொற்று பாதிப்பு நோயாளிகளில் பத்துக்கு ஒருவர் இறக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.  

தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள புதிதாய்ப் பிறந்த குழந்தைகளும், பெருந்தொற்று நோயாளிகளும் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்றும், 2017-18ம் ஆண்டிலிருந்து, 2021-22ம் ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கையில், நாடுகளில் நலவாழ்வுப் பராமரிப்புத் திட்டங்களில் முன்னேற்றம் இடம்பெற்றதாகத் தெரியவில்லை என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, WHO நிறுவனம் வெளியிட்டுள்ள இப்புதிய அறிக்கையில், உலக அளவில் கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்களில் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவில் இடம்பெற்றுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 May 2022, 17:40