தேடுதல்

லெபனோனில்  பொருளாதாரம் லெபனோனில் பொருளாதாரம்  (ANSA)

லெபனோனில் கடும் பொருளாதார நெருக்கடி

லெபனோனின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தாய் சேய் இறப்புகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன : UNICEF

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

லெபனோனில்  மகப்பேறு இறப்பு மும்மடங்கு அதிகரித்துள்ளதாகவும், கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் குழந்தைகளின் ஆரோக்கியம் ஆபத்தில் இருப்பதாகவும் UNICEF நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஏப்ரல் 20, புதன்கிழமையன்று, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிறுவனமான UNICEF வெளியிட்ட புதிய அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளதுடன்,  கர்ப்பம் தொடர்பான சிக்கல்களால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை மூன்று ஆண்டுகளில் ஏறத்தாழ மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.  

தற்போதைய பொருளாதார சூழல் காரணமாக 40 விழுக்காடு மருத்துவர்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுடன் பணிபுரிபவர்கள் உட்பட, 30 விழுக்காடு செவிலியர்கள்  நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் இவ்வறிக்கை தெரிவிக்கிறது.

அக்டோபர் 2021க்குள் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளுக்கு சுகாதார வசதி கிடைக்கவில்லை என்றும், மேலும் பிறந்த முதல் நான்கு வாரங்களுக்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மதிப்பீடு செய்யப்பட்ட நான்கு மாநிலங்களில் புலம்பெயர்ந்தோர் மத்தியில் அதிக அளவில் அதிகரித்துள்ளது என்றும் இவ்வறிக்கை கோடிட்டு காட்டியுள்ளது

துயருறும் பெற்றோர்கள் மற்றும் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கான அடிப்படை சுகாதாரப் பாதுகாப்பை பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர் என்றும்,  அர்ப்பணிப்புள்ள பல சுகாதார ஊழியர்கள் நெருக்கடியின் போது தங்களின் பணிகளைத் தொடர போராடுகிறார்கள் என்றும் லெபனோனுக்கான UNICEF  பிரதிநிதி Ettie Higgins அவர்களும் கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், லெபனோன் அரசு கடந்த வாரம் நாட்டில் அதிகரித்து வரும் உணவு பற்றாக்குறையை தற்காலிகமாக தீர்க்க 15 கோடி ரூபாய் வழங்கியுள்ளது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 April 2022, 15:49