தேடுதல்

தப்தி ஆறு தப்தி ஆறு 

இனியது இயற்கை: இந்தியாவில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்று தப்தி

தீபகற்ப இந்தியாவில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடும் மூன்றே ஆறுகளில் தப்தி ஆறும் ஒன்றாகும்

மேரி தெரேசா: வத்திக்கான்

மத்திய இந்தியாவில் நர்மதா ஆற்றுக்குத் தெற்கே அமைந்துள்ள தப்தி அல்லது தாபி  (Tapti அல்லது Tapi) ஆறு, மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் தென்பகுதியில் கிழக்கு சாத்புரா மலைத்தொடரில் மூல்தாய் என்ற இடத்தில் உற்பத்தியாகிறது. ஏறத்தாழ 724 கிலோ மீட்டர் நீளம்கொண்ட இந்த ஆறு, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாகப் பாய்ந்து, அரபிக் கடலில் கலக்கிறது. தீபகற்ப இந்தியாவில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடும் மூன்றே ஆறுகளில் இதுவும் ஒன்றாகும். நர்மதா மற்றும் மாகி, மற்ற இரண்டு ஆறுகளாகும். பருவமழைக் காலங்களில் பெய்யும் கன மழையால் தப்தி ஆறு  கரைபுரண்டோடும். மகாராஷ்டிரா மாநிலத்தில் 51,504 சதுர கிலோ மீட்டர், மத்தியப் பிரதேசத்தில் 9,804 சதுர கிலோ மீட்டர்,  மற்றும் குஜராத்தில் 3,837 சதுர கிலோ மீட்டர் என தப்தி ஆற்றுப்படுகை 65,145 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி, அகோலா, புல்டானா, வாசிம், ஜல்காவ்ன், துலே, நந்தர்பார், நாசிக், மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் பேதுல், பர்ஹான்பூர், குஜராத் மாநிலத்தின் சூரத் ஆகிய மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து அப்பகுதிகளை வளப்படுத்துகிறது தப்தி ஆறு. பூர்ணா, கிர்னா, பான்சரா, வாகுர், போரி, அனேர் ஆகியவை, தப்தியின் பெரிய துணையாறுகள் ஆகும். தப்தி என்ற பெயர், சூரியக் கடவுளின் மகள் Tapati என்ற பெயரிலிருந்து வந்துள்ளது என்று கூறப்படுகிறது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 March 2022, 15:02