தேடுதல்

கடல் தரும் உணவு கடல் தரும் உணவு 

இனியது இயற்கை : கடல் வளங்கள்

50 முதல் 80 விழுக்காடு பிராண வாயுவை மனிதனுக்கு கடல்தான் தருகிறது. பூமியின் நுரையீரல் என்றுகூட கடலைச் சொல்லலாம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

கடலில் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாவிலிருந்து புவியின் பெரும் பிராணியான திமிங்கலம் வரை உள்ளன. 150,000 வகை உயிரினங்கள் வாழ்கின்றன என்கின்றனர், அதில் 16,000 வகைமீன்களும், 20,000 வகை தாவரங்களும் அடங்கியுள்ளன.

கடலில் உப்பு முதல் அனைத்து வகையானக் கனிமப்பொருட்களும் உள்ளன. இவைகள் தெழிற்சாலை வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுகின்றன. சக்திவளங்களான எண்ணெய் கடலுக்கு அடியில் கண்டங்களின் கண்டத்திட்டுப் பகுதியில் இருப்பதாக கண்டுள்ளனர். எனவே, நமக்குத் தேவையான உணவுப்பொருள், மற்றும் கனிமப்பொருட்களை மட்டுமல்ல, சக்தி வளங்களையும் கடல் அளிக்கிறது. கடலிலிருந்து உணவுப் பொருட்கள் தேவையான அளவு பெறப்படுகின்றது. மீன் ஒரு முக்கிய உணவுப் பொருளாகவும், மீன் பிடிக்கும் தொழில் ஒரு முக்கியத் தொழிலாகவும் இருப்பதை கண்முன்னே காண்கிறோம். இது மட்டுமல்ல, கடல், மழையைத் தரக்கூடிய ஒரு முக்கிய ஆதாரம் எனலாம். கடலிலிருந்து வீசும் காற்றின் வழியாக கடற்கரையை ஒட்டிய நிலப்பகுதிகள் அதிக மழை பெறுகின்றன. மேலும், 50 முதல் 80 விழுக்காடு பிராண வாயுவை மனிதனுக்கு கடல்தான் தருகிறது. பூமியின் நுரையீரல் என்றுகூட கடலைச் சொல்லலாம்.

மீனவர்களுக்கு மட்டுமல்லாமல் உலகிலுள்ள மக்கள் அனைவரின் அன்றாட வாழ்க்கைக்கும் கடல் இன்றியமையாதது. நாம் சுவாசிக்கும் தூயக் காற்றையும், ஊட்டமிகு உணவையும் வழங்கும் கடல் உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாகவும், சாதாரண மக்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கின்றது. கடல்வழி பல நாடுகளுக்கு மக்கள் பயணிக்கவும், அனைத்துலக வர்த்தகப் பாதைகளாகவும் கடல்கள் விளங்குகின்றன. இப்படிப் பல்வேறு வகைகளில் மக்களின் வாழ்க்கையில் கடல் வளங்கள் மிக முக்கியப் பங்கை ஆற்றுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 February 2022, 14:53