தேடுதல்

பழ விற்பனை கடை பழ விற்பனை கடை  

இனியது இயற்கை: மனிதருக்கு குடிநீரின் அவசியம்

தக்காளியில் 95 விழுக்காடும், மாங்காயில் 65 விழுக்காடும், தர்பூசணியில் 95 விழுக்காடும் அன்னாசியில் 87 விழுக்காடும் தண்ணீர் உள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒரு மனிதன் உணவு சாப்பிடாமல் ஒரு மாதம் வாழ முடியும். ஆனால் ஒரு வாரத்துக்கு மேல் தண்ணீர் குடிக்காமல் வாழ முடியாது. மனித உடல் சீராக இயங்க கண்டிப்பாக தண்ணீர் தேவை. தண்ணீர் மனிதர் உயிர்வாழத் தேவையான சக்தியை அளிக்கிறது.   சுத்தமான தண்ணீரைக் குடிப்பதன் வழியாக, நோய் தடுப்பாற்றலை பெறலாம். தண்ணீர் அதிகம் குடித்தால் தலைவலி வராது. ஆரோக்கியமான அழகான தோற்றத்துக்கு தண்ணீர் அவசியம்.  உணவு செரிக்கவும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதும் தண்ணீரின் தலையாய பணி. உடலுக்குத் தேவையான சத்துக்களை அந்தந்த பாகங்களுக்கு எடுத்துச் செல்ல தண்ணீர் அவசியம். உலகின் சராசரி மழை அளவு 850 மி.மீ. உலகின் தட்பவெப்ப நிலையை பேணிக்காப்பதில் தண்ணீரின் பங்கு அதிகம். விலங்குகளின் ரத்தம், தாவரங்களின் திசுக்கள் ஆகியவற்றில் தண்ணீரின் அளவு அதிகம். தக்காளியில் 95 விழுக்காடும், மாங்காயில் 65 விழுக்காடும், தர்பூசணியில் 95 விழுக்காடும் அன்னாசியில் 87 விழுக்காடும் தண்ணீர் உள்ளது. மேலும், உலகில் ஏறத்தாழ 150 கோடி மக்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் துயருறுகிறார்கள். தண்ணீர் தொடர்பான நோயால் ஆண்டுக்கு நாற்பது இலட்சம் மக்கள் மரணத்தை தழுவுகிறார்கள். அசுத்தமான தண்ணீரே காலராவுக்கு மூல காரணம். இதன் மூலம் 43 விழுக்காட்டினர் மரணத்தைத் தழுவுகிறார்கள். வளரும் நாடுகளில் நிகழும் மரணங்களில் 98 விழுக்காடு தண்ணீரால் ஏற்படுகிறது. சுகாதாரமற்ற தண்ணீரைக் குடிப்பதால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் காலராவால் மடிகிறார்கள். ஆப்ரிக்க வாழ் பெண்கள் ஒருநாளைக்கு 16 மணி நேரத்தை தண்ணீர் தேடி அலைவதிலேயே செலவழிக்கிறார்கள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 February 2022, 13:56