தேடுதல்

அமேசான் நதியின் கிளையான Jurua நதி  அமேசான் நதியின் கிளையான Jurua நதி  

இனியது இயற்கை : உலகின் மிக நீளமான நதி

இதயத்துக்குள் ஓடும் நரம்புகளைப் போல, வெப்பமண்டல மழைக்காட்டுக்குள் அமேசான் நதி பாயும் பகுதியே அமேசான் காடு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உலகின் மிக நீளமான நதி, அதிக நீரைக் கடலில் கலக்கும் நதி, எது என்று கேட்டால், பிரேசில் நாட்டில் பாயும் அமேசான் நதிதான் அது என்று கூறிவிடலாம். இந்த நதியின் நீளம் 6,760 கிலோ மீட்டர். இதயத்துக்குள் ஓடும் நரம்புகளைப் போல, வெப்பமண்டல மழைக்காட்டுக்குள் இந்த நதி பாயும் பகுதியே அமேசான் காடு. அமேசான் மழைக்காடுகளின் 60 விழுக்காடு பிரேசில் நாட்டில் இருக்கிறது. உலகின் நுரையீரலாக விளங்கும் இக்காடுகளுக்கு வளம் அளிப்பது அமேசான் நதிதான்.  அமேசான் நதியில் மட்டும் 2,000 மீன் வகைகள் வாழ்கின்றனவாம்.  அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து 1,600 கி.மீ. தொலைவில் உள்நாட்டில் உள்ள மனாவ்ஸ் நகரம், அமேசான் நதியின் பிரம்மாண்டம் காரணமாக ஒரு துறைமுகமாகவே செயல்படுகிறது. பிரேசில், பொலிவியா, கொலம்பியா, ஈக்குவதோர், கயானா, வெனிசுவேலா, பெரு, மற்றும் சுரினாம் பகுதிகளைக் கடந்து செல்கிறது அமேசான் நதி. இந்த நாடுகள் அனைத்தும் அமேசான் நதியின் நீரை பயன்படுத்திக் கொள்கின்றன. ஏறக்குறைய 1.6 கிலோமீட்டர் அகலங்களைக் கொண்ட இடங்கள், குறிப்பாக ஆரம்பத்தில் உள்ளன. இருப்பினும், பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச அகலம் 10 கிலோமீட்டர்.  அமேசான் நதி, 6.400 துணை நதிகளைக் கொண்டுள்ளது. இது உலகின் மிகப் பெரிய நதி என்றாலும், அதன் நீளம் தொடர்பாக, நைல் நதியுடன் முதல் இடத்திற்காகத் தொடர்ந்து போராடி வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 February 2022, 11:44