தேடுதல்

நிக்கராகுவாவில் வாக்குப் பதிவு இயந்திரம் தயாரிக்கப்படுவதை புகைப்படம் எடுக்கும் பத்திரிகையாளர் நிக்கராகுவாவில் வாக்குப் பதிவு இயந்திரம் தயாரிக்கப்படுவதை புகைப்படம் எடுக்கும் பத்திரிகையாளர்  

2020ம் ஆண்டில் 62 பத்திரிகையாளர்கள் கொலை

2006க்கும், 2020ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் 1,200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பணியின்போது கொல்லப்பட்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பத்திரிகையளர்களுக்கு எதிராக குற்றங்கள் இழைப்போர், தண்டனையிலிருந்து தப்பிக்க வழிசெய்வது நிறுத்தப்படவேண்டும் என அழைப்புவிடுக்கும் உலக நாள், நவம்பர் 2, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், போர் இடம்பெறும் இடங்களில் மட்டுமல்லாமல், மற்ற இடங்களிலும் கொலை செய்யப்படும் பத்திரிகையாளரின் எண்ணிக்கை, அண்மைய ஆண்டுகளில், அதிகரித்துவருகின்றது என்று கூறினார்.

2006ம் ஆண்டுக்கும், 2020ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் 1,200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களும், 2020ம் ஆண்டில் மட்டும் 62 பத்திரிகையாளர்களும், பணியின்போது கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இவ்விவகாரத்தில், பத்தில் ஒன்பதில், கொலையாளிகள் தண்டனைபெறாமலே உள்ளனர் என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

கொலையாளிகளை நீதி விசாரணைக்குக் கொண்டுவருவது மட்டுமல்ல, அவர்களால் வன்முறைக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவண்ணம் காப்பதும் நீதிபதிகளின் முக்கியமான கடமை என்பதை வலியுறுத்திக் கூறியுள்ள கூட்டேரஸ் அவர்கள், பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்கள், தகவல் அளிக்கும் நிலையிலிருந்து பொதுமக்களைத் தடுத்து, சமுதாயத்தில் பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன எனவும் கூறியுள்ளார்.

கடத்தல், சித்ரவதை, திட்டமிட்ட கைதுகள், தவறான தகவல் அளிக்க வற்புறுத்தல், கேள்விகளால் நச்சரிப்பு போன்ற எண்ணற்ற அச்சுறுத்தல்களை, பத்திரிகையாளர்கள், குறிப்பாக பெண் பத்திரிகையாளர்கள் அதிகமாக எதிர்கொள்கின்றனர் என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

2021ம் ஆண்டு, பத்திரிகையாளரின் பாதுகாப்பு குறித்து செயல்திட்டம் வகுக்கப்பட்ட 10ம் ஆண்டு நிறைவு என்பது குறிப்பிடத்தக்கது (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2021, 15:44