தேடுதல்

அறிவு அறிவு 

வாரம் ஓர் அலசல்: அறிவின் நற்பயன்கள்

உன் அறிவு அடுத்தவர்களுக்கு உதவும்போது அது அறிவியல் ஆகிறது. அது உனக்கு மட்டுமே உதவும்போது ஆணவமாகிறது. உன் அறிவால் உன்னைத் தேடும்போது ஆன்மீகமாகிறது - இணையதளம்

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

அறிவு என்பது, தனிநபரால் பெறப்பட்ட திறன்கள், செயல்முறைகள் மற்றும், தகவல்களின் தொகுப்பாகும். இது, சூழ்நிலை அறிவு, இயற்கையறிவு, கல்வி அறிவு, எழுத்தறிவு, ஆழ்மனப்பதிவறிவு, பட்டறிவு, மெய்யறிவு போன்று வரையறுக்கப்படுகின்றது. இவ்வாறு தமிழ் விக்கிப்பீடியா பதிவுசெய்துள்ளது. அறிவு என்பதை, மதி, உரம், ஞானம், உணர்வு, மேதை, விவேகம் எனவும் பிரித்து விளக்கம் சொல்லியுள்ளது, தமிழ் விக்னசரி இணையதளம். கிரேக்க மெய்யியல் மேதையான பிளேட்டோ அவர்கள், ஒரு பொருளைக் குறித்து ஆய்வுகள் செய்து நிரூபிக்கப்பட்ட கருத்துக்களின் தொகுப்பே அறிவு என்று கூறியுள்ளார். வள்ளுவப்பெருந்தகையும், அறிவுடைமை (421-430) என்ற தலைப்பில், அருமையான பத்து குறள்பாக்களை வடித்துள்ளார். ஒருவனுக்கு அழிவு வராமல் காத்துகொள்ளும் கருவியே அறிவு. அதோடு, அது, பகைவர் உள்புகுந்து அழிக்க முடியாத கோட்டையுமாகும். மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.... இவ்வாறு வள்ளுவம் சொல்லுகிறது. இக்காலச் சூழலில், மானிட சமுதாயத்திற்கு அறிவு எவ்வளவு தேவைப்படுகின்றது என்பது பற்றிய தன் சிந்தனைகளை இன்று வழங்குகிறார், அருள்முனைவர் ஆரோக்ய ஜோஸ். உரோம் நகரில் திருஅவை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், குழித்துறை மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்.

வாரம் ஓர் அலசல்: அறிவின் நற்பயன்கள்

படித்துத் தெரியும் அறிவைவிட, பட்டுத் தெளியும் அறிவு சிறந்தது. உன் அறிவு அடுத்தவர்களுக்கு உதவும்போது அது அறிவியல் ஆகிறது. அது உனக்கு மட்டுமே உதவும்போது ஆணவமாகிறது. உன் அறிவால் உன்னைத் தேடும்போது ஆன்மீகமாகிறது என்று பட்டறிவாளர்கள் கூறுகின்றனர். சிந்திப்போம்.

23 August 2021, 14:34