தேடுதல்

ஜெர்மனியில் மாரத்தான் ஓட்டம் ஜெர்மனியில் மாரத்தான் ஓட்டம் 

வாரம் ஓர் அலசல்: போட்டியிடுவதற்காக அல்ல வாழ்க்கை..

வாழ்க்கை போட்டியிடுவதற்காக அல்ல. ஏனெனில் போட்டி பல நேரங்களில் சிக்கல்களை உருவாக்கும். மற்றவர்களைவிட வெற்றிகரமாக வாழ்ந்துவிடவேண்டும் என்ற எண்ணம், மகிழ்ச்சியைத் தொலைத்துவிடும்

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

லெபனோன் நாட்டு புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான கலீல் ஜிப்ரான் அவர்களிடம், ஒரு மனிதருடைய வெற்றியான வாழ்க்கைக்குத் தேவையானவை எவை என்று கேட்டபோது அவர் சொன்னார்.. திடமான உடம்பு, தெளிவான மனது, கூர்மையான அறிவு, தேவையான பணம், அன்பான குடும்பம், அறிவுள்ள மக்கள், அறிவுள்ள பிள்ளைகள் என்று. அவர் மேலும் சொன்னார், துன்பமற்ற பகலும், இன்பமான இரவுமே, வெற்றியான வாழ்க்கைக்குத் தேவை என்று.  வாழ்க்கை வாழ்வதற்கே, அது வீழ்வதற்காக அல்ல. இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கல்ல....இவ்வாறு பலரும் வாழ்க்கை பற்றிய தங்கள் சிந்தனைகளை இணையத்தில் பதிவுசெய்துள்ளனர். அருள்முனைவர் ஆரோக்ய ஜோஸ் அவர்கள், வாழ்க்கை போட்டியிடுவதற்காக அல்ல. ஏனெனில் போட்டி பல நேரங்களில் சிக்கல்களை உருவாக்கும். மற்றவர்களைவிட வெற்றிகரமாக வாழ்ந்துவிடவேண்டும் என்ற எண்ணம், மகிழ்ச்சியைத் தொலைத்துவிடும். போட்டி மனப்பான்மை, மனமகிழ்ச்சியைத் திருடுகின்றது. எனவே அவரவர் வாழ்க்கை அவரவர்க்கே என்ற மனநிலையில், நமக்கு நாமே போட்டிபோடவேண்டும், அப்பொழுது வாழ்க்கை மனமகிழ்ச்சியை நிச்சயம் தரும்.. சிறிய வேலையைச் செய்தாலும், அதை மனநிறைவோடு செய்யவேண்டும் என்று, வாழ்க்கை பற்றி விவரிக்கிறார். உரோம் மாநகரில் திருஅவை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள அருள்பணி ஆரோக்ய ஜோஸ் அவர்கள், குழித்துறை மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்.

வாழ்க்கை வாழ்வதற்கே

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 August 2021, 14:10