தேடுதல்

"இதை மறுக்க இயலாது" என்ற தலைப்பில், காலநிலை நடவடிக்கை podcast "இதை மறுக்க இயலாது" என்ற தலைப்பில், காலநிலை நடவடிக்கை podcast 

"இதை மறுக்க இயலாது" - ஐ.நா.வின் podcast தொடர்

படைப்பை பாதுகாத்து, காலநிலை மாற்றத்தின் சீற்றங்களைக் குறைப்பதற்கு, இளையோர் மேற்கொண்டு வரும் முயற்சிகளை வெளியிடும் ஐ.நா.வின் podcast

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

காலநிலை மாற்றத்தில் உருவாகியுள்ள ஆபத்தான விளைவுகளை மறுக்கஇயலாது என்பதையும், இதைத் தடுக்க சுற்றுச்சூழலைக் காக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்த, ஐ.நா. அவை, "No Denying It", அதாவது, "இதை மறுக்க இயலாது" என்ற தலைப்பில், காலநிலை நடவடிக்கை podcastஐ, ஆகஸ்ட் 26, இவ்வியாழனன்று துவங்கியுள்ளது.

படைப்பை பாதுகாத்து, காலநிலை மாற்றத்தின் சீற்றங்களைக் குறைப்பதற்கு, இளையோர் மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கென்று நியமிக்கப்பட்டுள்ள நல்லெண்ணத் தூதர்களின் கருத்துக்களையும் பேட்டிகளாக வெளியிட ஐ.நா.அவை, இந்த podcast முயற்சியைத் துவக்கியுள்ளது என்று இவ்வமைப்பின் அறிக்கையொன்று கூறுகிறது.

காலநிலை மாற்றத்தின் ஆபத்தான விளைவுகள், சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவற்றைக் குறித்த செய்திகள் ஊடகங்களை பெருமளவு ஆக்ரமித்து வரும்வேளையில், சுற்றுச்சூழலைக் காப்பதற்காக இளையோர் மேற்கொள்ளும் முயற்சிகள் வெளிவராமல் போகும் ஆபத்து உள்ளது என்பதை உணர்ந்து, இந்த podcast முயற்சியை ஐ.நா. மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கென்யா நாட்டில், மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களையும், ஏனைய குப்பைகளையும் பயன்படுத்தி, கட்டுமானப் பொருள்களை உருவாக்கும் Gjenge Makers என்ற ஒரு சிறு தொழிற்சாலையை உருவாக்கியுள்ள Nzambi Matee என்ற இளம்பெண்ணின் பேட்டியொன்று podcastல் இடம்பெற்றுள்ளது.

கனடா நாட்டின் பழங்குடியின தலைவரான Dana Tizya-Tramm அவர்கள், நிலத்தடி எரிசக்திகளைப் புறக்கணித்து, சூரிய ஒளி சக்தியை தங்கள் சமுதாயம் பெரிதும் பயன்படுத்துவதைக் குறித்து, வழங்கியுள்ள பேட்டி, ஆகஸ்ட் 26, இவ்வியாழன் podcastல் வெளியானது.

ஐ.நா.செய்தித்துறையும், Good To Do Today என்ற தனியார் podcast நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த podcast வெளியீடுகள், COP26 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, ஆகஸ்ட் 26, இவ்வியாழன் துவங்கி, அக்டோபர் 28ம் தேதி வியாழன் முடிய பத்து வெளியீடுகளாக ஒவ்வொரு வியாழனன்றும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 August 2021, 14:49