தேடுதல்

பெங்களூரு மருத்துவப் பணியாளர்கள் பெங்களூரு மருத்துவப் பணியாளர்கள் 

வாரம் ஓர் அலசல்: இந்தியாவின் 72வது குடியரசு நாள் சிறப்பு செய்தி

இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள், 1950ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அவை 1949ம் ஆண்டு நவம்பா் மாதம் 26ம் நாள் முதல், இந்திய அரசியலமைப்பு அவையால் அங்கீகாிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வந்தது.

மேரி தெரேசா: வத்திக்கான்

இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டங்கள் உருவாக்கப்பட்டு, அவை 1950ம் ஆண்டு சனவாி மாதம் 26ம் நாள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அந்த சிறப்பு மிகுந்த நாளை கௌரவிக்கும் பொருட்டு, 1950ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் சனவாி மாதம் 26ம் நாளன்று, இந்திய குடியரசு நாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சனவாி 26ம் நாளுக்கு, ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதாவது 1929ம் ஆண்டு சனவாி 26ம் தேதியன்று தான் இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பு, ஆங்கிலேயா்களின் ஆட்சிக்கு எதிராக இந்திய விடுதலையை, பூா்ண சுயராஜ் விடுதலை முழக்கத்தை முதன் முறையாக அறிவித்தது. 2021ம் ஆண்டு, சனவரி 26, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்படும் 72வது இந்திய குடியரசு நாள் அணிவகுப்பில் முதல்முறையாக வங்கதேச இராணுவமும் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வங்கதேச இராணுவத்தின் முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள், ஏறத்தாழ 122 இராணுவ வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். இந்த 72வது இந்திய குடியரசு நாள் சிறப்பு செய்தியை இன்று வழங்குகிறார், அருள்பணி எஸ்.ஆரோக்யசாமி. இவர், தஞ்சாவூர் மறைமாவட்டத்தின் திருவழிபாடு பணிக்குழுவின் செயலர்.

இந்தியாவின் 72வது குடியரசு நாள் சிறப்பு செய்தி

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2021, 14:38