தேடுதல்

புனித அன்னை தெரேசா புனித அன்னை தெரேசா  

விதையாகும் கதைகள் – மனித முயற்சியும், இறையருளும்

மனித முயற்சியும், இறையருளும் இணைந்தால் வாழ்வில் அபார வெற்றி கிட்டும். கடவுளின் மகிமை, தோல்விகளை வெற்றிகளாக உருமாற்றி விடுகிறது.

மேரி தெரேசா - வத்திக்கான்

ஒருமுறை புனித அன்னை தெரேசா அவர்கள் திட்டம் ஒன்றை நிறைவேற்ற அவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தேவைப்பட்டது. ஆனால் அந்நேரத்தில் அவரிடம் இருந்ததோ வெறும் நூறு ரூபாய் மட்டுமே. அப்போது ஒருவர், அவரிடம் இந்த நூறு ரூபாயை வைத்து என்ன செய்வீர்கள் என்று கேட்டார். அதற்கு அன்னை தெரேசா அவர்கள், இந்த நூறு ரூபாயும், நானும் ஒன்று சேர்ந்தால் எதுவும் செய்ய இயலாது, அதேநேரம், இந்த சிறிய தொகையும், நானும், கடவுளுடன் சேர்ந்தால், எதுவும் செய்ய முடியும் என்று பதில் சொன்னார். ஆம். நம் முயற்சியும், இறையருளும் இணைந்தால் வாழ்வில் அபார வெற்றி அடையலாம். கடவுளின் மகிமை, தோல்விகளை வெற்றிகளாக உருமாற்றி விடுகிறது. இந்த உண்மையில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்து புலரும் 2021ம் ஆங்கில ஆண்டில் காலடி பதிப்போம்.

31 December 2020, 13:50