தேடுதல்

ஜெனீவாவில் பெட்டிக்குள் இரத்தினம் ஜெனீவாவில் பெட்டிக்குள் இரத்தினம் 

விதையாகும் கதைகள் - இப்படியும் ஒரு வாழ்வு

வெளியுலகப் பார்வைக்கு ஒருவர் புகழின் உச்சியில் இருக்கலாம், ஆனால் அவரால் சுதந்திரமாக வெளியே தலைகாட்ட முடிவதில்லை. இப்படியும் ஒரு வாழ்வு

மேரி தெரேசா-வத்திக்கான்

நகைக் கடை ஒன்றில், இரத்தினக்கல் ஒன்று, வண்ண வண்ண விளக்குகளுடனும், பலத்த காவலுடனும், ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் மின்னிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த, தெருவிலே கிடந்த கூழாங்கல் ஒன்று, அந்த இரத்தினக் கல்லிடம், உன்னைப் போல நானும் ஒரு கல்லாக இருந்தும், ஏன் எனக்கு மதிப்பில்லை என்று கலங்கி, கவலையோடு சொன்னது. அப்போது இரத்தினக்கல், கூழாங்கல்லிடம், அடிமைபோல் இப்படி அடைபட்டுக்கிடக்கும் என்னைப் பார்த்தா சுதந்திரமாகத் தெருவிலே வாழும் நீ பொறாமைப்பட்டுக் கலங்குகிறாய் என்று சொன்னது.

வெளியுலகப் பார்வைக்கு ஒருவர் புகழின் உச்சியில் இருக்கலாம், ஆனால் அவரால் சுதந்திரமாக வெளியே தலைகாட்ட முடிவதில்லை. இப்படியும் ஒரு வாழ்வு. நன்றி (அருள்பணி அந்தோனி சேவியர் சே.ச.)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2020, 17:24