தேடுதல்

Vatican News
விவசாயத் தொழிலாளர்கள் விவசாயத் தொழிலாளர்கள்  (ANSA)

விதையாகும் கதைகள் : இன்று மட்டும் ஏன் அழுகை?

வலி அதிகமாக இருந்தபோது பொறுத்துக் கோள்ள முடிந்தது. ஆனால், வலி குறையும்போது, அழத் தோன்றுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

அப்பாவுக்கு வயது 108, மகனுக்கு வயது 80. இருவரும், ஒவ்வொருநாளும், காலை முதல் மாலை வரை வயலில் வேலை செய்வர். அப்பா முன்கோபம் கொண்டவர். சிறு தவறுகளுக்கும் தன் மகனை, அந்த வயதிலும் அடிப்பார். ஆனால் மகன் எதிர்த்துக்கூட பேசமாட்டார். ஒரு நாள் கோபத்துடன் தந்தை மகனை அடித்தபோது மகன் கண்ணீர் விட்டு அழுதார்.

“இத்தனை நாள் இல்லாது இன்று மட்டும் அழுத காரணம் என்ன?” என்று தந்தை கேட்டார்.

அதற்கு மகன், “அப்பா, இதுவரை நீங்கள் அடித்தபோதெல்லாம் வலி அதிகமாக இருக்கும். நானும் பொறுத்துக்கொள்வேன். இன்று நீங்கள் ஓங்கி அடித்தும் வலிக்கவில்லை. உங்கள் உடம்பில் வலு குறைந்துவிட்டதே என்று நினைத்துதான் அழுதேன்” என்றார்.

11 December 2020, 11:23