தேடுதல்

Vatican News
இறைவனை நோக்கி வேண்டல் இறைவனை நோக்கி வேண்டல்  (ANSA)

விதையாகும் கதைகள் : கடவுளுக்கும் நமக்கும் இருக்கும் தூரம்

எந்த இடத்தில் கடவுள் இருப்பதாக நினைக்கிறோமோ அதைப் பொருத்து, நம் குரலின் வலிமை இருக்கும். எந்த இடத்தில் இருந்தாலும் நம் குரல் கடவுளுக்கு கேட்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

முன்னொரு காலத்தில் மன்னர் ஒருவர் ஆட்சிபுரிந்து வந்தார். ஒரு நாள் அவர் மனதில், “கடவுள் இருக்கும் இடத்திற்கும், நமக்கும் எவ்வளவு தூரம் இருக்கும்?” என்ற வினா எழுந்தது. உடனே அரசவையைக் கூட்டினார் மன்னர். யாருக்கும் இதற்கான விடை தெரியவில்லை. இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள ஊருக்கு வெளியிலிருந்து ஒரு முனிவர் வரவழைக்கப்பட்டார்.

அந்த முனிவரிடம், “கடவுள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று வினவினார் மன்னர்.

அதற்கு அந்த முனிவர், “கடவுள் கூப்பிடுகிற தூரத்தில்தான் இருக்கிறார்” என்று பதில் அளித்தார்.

“அப்படியானால், கடவுளை அழைத்தால் உடனே வந்து விடுவார் அல்லவா?” என்று கேட்டார் மன்னர்.

அதற்கு அந்த முனிவர், “எந்த இடத்தில் கடவுள் இருப்பதாக நினைக்கிறோமோ அதைப் பொருத்தது. எந்த இடத்தில் இருந்தாலும் உங்களின் குரல் கடவுளுக்கு கேட்கும். உங்கள் உள்ளத்தில் கடவுளை எப்போதும் இருத்தி வைத்தால், அவ்வளவு அருகாமையிலிருக்கும் கடவுள், உடனே வந்து அருள் பாலிப்பார்”, என மன்னருக்கு விளக்கம் அளித்தார்.

18 December 2020, 13:29