தேடுதல்

Vatican News
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் கோவிட்-19 சோதனைகள் இலங்கைத் தலைநகர் கொழும்புவில் கோவிட்-19 சோதனைகள்  (ANSA)

புலம்பெயர்ந்தோர் கோவிட்-19 தொற்று உள்ளவர்களாக...

புலம்பெயர்ந்த இலங்கை மக்கள், 2019ம் ஆண்டில், அந்நாட்டிற்கு 670 கோடி டாலர் நிதியை அனுப்பி, நாட்டின் பொருளாதாரம் உயர உதவியுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளால், இலங்கையின் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தாயகம் திரும்பக் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்று, ஆசியச் செய்தி கூறுகிறது.

மத்தியக் கிழக்கு மற்றும், வளைகுடா நாடுகளில், குறைந்தது 45,900 இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வேலை, ஊதியம் அல்லது எவ்வித வருமானமும் இன்றி, நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படும் நிலையிலும் உள்ளனர் என்றும், அதேநேரம், அவர்கள் கொரோனா தொற்றைப் பரப்புகிறவர்களாக நோக்கப்படுகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலக அளவில், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்களில், 11,268 பேர், 14 நாடுகளிலிருந்து நாடு திரும்பியுள்ளனர், அதேவேளை மேலும் 45,900 பேர் இலங்கைக்குச் செல்ல காத்திருக்கின்றனர்.

புலம்பெயர்ந்த இலங்கை மக்கள், 2019ம் ஆண்டில், அந்நாட்டிற்கு 670 கோடி டாலர் நிதியை அனுப்பி, நாட்டின் பொருளாதாரம் உயர உதவியுள்ளனர். (Asia News)

18 December 2020, 14:20