தேடுதல்

இராணுவ கப்பல் இராணுவ கப்பல்  (ANSA)

விதையாகும் கதைகள் : சூழ்நிலை புரிந்தது

போராடி வெற்றி பெறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதை உணர்ந்து, வெறியுடன் சண்டையிட்டு வெற்றி பெற்றனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஒரு தளபதி அடுத்த நாட்டின்மீது படையெடுக்க, தன் வீரர்களுடன் கப்பலில் போய் இறங்கினார்.

இறங்கியதும், முதல் வேலையாக, அவர்கள் வந்த கப்பலைத் தீயிட்டுக் கொளுத்தினார். படைவீரர்கள் திடுக்கிட்டனர்.

தளபதி அப்போது சொன்னார், ''நாம் நம் எதிரிகளை வென்று, அவர்களுடைய கப்பலில் ஊர் திரும்பலாம்'', என்று. வீரர்களுக்கு சூழ்நிலை புரிந்தது.

தோல்வி அடைந்தால் ஊர் திரும்பக் கப்பல் இல்லை. எதிரிகளும் சும்மா விடமாட்டார்கள். போராடி வெற்றி பெறுவதைத்தவிர வேறு வழி இல்லை என்பதை உணர்ந்து, வெறியுடன் சண்டையிட்டு, வெற்றி பெற்றனர்.

09 October 2020, 14:11