தேடுதல்

புத்தமத துறவி புத்தமத துறவி  

விதையாகும் கதைகள் : வாழ்வில் இன்ப துன்பங்கள்

கசப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு, என, பலசுவை கலந்த மனிதவாழ்வில், ஒரு சுவையை மட்டும் உண்டு, உயிர்வாழ முடியாது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

‘குருவே, வாழ்க்கை மிகவும் கடினமாயிருக்கிறது. கவலை, கஷ்டம், வருத்தம் இவைகளால் நிறைந்திருக்கிறது. வாழ்க்கை இன்பமாகவே இருக்க ஏதாவது வழியிருக்கிறதா சொல்லுங்கள்’, என்று, ஞானி ஒருவரிடம் கேட்டார் பக்தர்.

‘காபி சாப்பிடுகிறாயா’,  என்று கேட்டார் ஞானி. தலையசைத்தார் வந்தவர். உள்ளேயிருந்து ஒரு கிண்ணத்தில் காபித்தூள் கொண்டு வந்தார் ஞானி.

‘இந்தா, சாப்பிடு...’ என்று அவர் சோல்ல, வந்தவருக்கு ஒன்றுமேப் புரியவில்லை. ‘சாப்பிடு, பாலைக் கொண்டு வருகிறேன்’ என்று இன்னொரு கிண்ணத்தில் பாலைக் கொண்டு வந்தார் ஞானி. பிறகு இன்னொரு கிண்ணத்தில் தண்ணீர், சர்க்கரை எல்லாம் வந்தன.

‘குருவே, இவற்றை எப்படி தனித்தனியே சாப்பிடுவது?’, என கேட்டார் பக்தர். ‘காபியையே உன்னால் தனித்தனியாகச் சாப்பிட முடியவில்லை. வாழ்க்கையும் அப்படித்தான். பிரித்துச் சாப்பிட இயலாதது அது’, என்று பதிலளித்தார் ஞானி.

23 October 2020, 12:31