தேடுதல்

தென் ஆப்ரிக்க சிறுவன் ஒருவன் தென் ஆப்ரிக்க சிறுவன் ஒருவன்  (ANSA)

விதையாகும் கதைகள் : நீதி இன்னும் இறக்கவில்லை

நேர்மைபும், நியாயமும், மனிதாபிமானமும் நிறைந்த நீதிபதிகள் இன்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாா்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

அமெரிக்க ஐக்கிய நாட்டு கடை ஒன்றில், பதினைந்து வயதான சிறுவன் ஒருவன், கொஞ்சம் ரொட்டி, வெண்ணெய்கட்டி ஆகியவற்றை திருடிக்கொண்டு ஓடியபோது அந்தக் கடையிலிருந்த அலமாரியும் உடைந்துவிட்டது. அன்று நீதிபதி ஒருவர் அந்த வழக்கை விசாரித்தார். நீதிபதியும், சிறுவனிடம் பல்வேறு கேள்விகளை அடுக்கினார்.   

நானும் அம்மாவும்தான் வாழ்கிறோம். அம்மா நோயால் படுத்துகிடக்கின்றாா். நான் ஒரு காா் கழுவும் இடத்தில் வேலைப் பாா்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் என் அம்மாவைக் கவனிப்பதற்காக நான் விடுமுறை எடுத்ததால் என்னை அந்த வேலையிலிருந்து நீக்கிவிட்டனா். எனக்கு இப்போது வேலையில்லை. நான் இன்று காலையில் வீட்டைவிட்டு வெளியேறி, ஐம்பதிற்கும் அதிகமான ஆள்களிடம் வேலை கேட்டேன் எனக்கு யாரும் வேலை தரவில்லை. அதனால் திருடினேன். இவ்வாறு சிறுவன் விசாரணையில் சொன்னான்.  அதற்குப் பிறகு நீதிபதி தீர்ப்பு அறிவிக்கத் தொடங்கினாா்.  இது மிகவும் உணா்ச்சிப்பூர்வமான திருட்டு. இந்த குற்றத்திற்கு என்னையும் சோ்த்து நாம்தான் பொறுப்பு ஏற்கவேண்டும். அதனால் நான் உள்பட, நீதி மன்றத்திலுள்ள ஒவ்வொருவரும், பத்து டாலரைக் கொடுக்காமல், இங்கிருந்து வெளியே செல்லக்கூடாது. இவ்வாறு சொல்லி, முதலில் நீதிபதி பத்து டாலரை எடுத்து மேசை மீது வைத்தாா். பிறகு இவ்வாறு தீர்ப்பு எழுதினார்.

பட்டினியால் திருடிய அந்த சிறுவன் மீது மனிதாபிமானம் இல்லாத முறையில் நடந்தும், குற்றம் சுமத்தி, காவல்துறையில் ஒப்படைத்த கடை முதலாளிக்கு ஆயிரம் டாலா் அபராதம். அந்த தொகையை 24 மணிக்குள்ளாகச் செலுத்தவேண்டும். இல்லாவிடில், கடைக்கு முத்திரை வைக்கப்பட்டு நிரந்தரமாக மூடப்படும்.

08 October 2020, 12:41