தேடுதல்

கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் 

விதையாகும் கதைகள் : கேட்டுத் தெரிந்து கொள்ள முடியுமா?

ஒருவரைப் பார்த்து அவர் சாதியை அடையாளம் சொல்லமுடியவில்லையென்றால், அந்த சாதி எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறது என்பதை எப்படி கண்டுகொள்கிறார்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

கேரளாவில் ஸ்ரீ நாராயணகுரு என்றொரு மகான் இருந்தார். அவர் ஒருநாள் தோட்டத்தில் வரப்பு வழியாக நடந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் உயர்சாதியினர் ஒருவர் வந்தார். உயர்சாதியினர் வந்தால் எதிரில் வருபவர்கள் வழிவிட வேண்டும் என்பது, அங்கு எழுதப்படாத சட்டம். ஆனால் நாராயணகுரு வழிவிட்டு ஒதுங்கி நிற்கவில்லை. அவர் யாரென்று அறியாத உயர்சாதியினர், அவர் வழிவிட்டு ஒதுங்கி நிற்கவேண்டும் என்று எதிர்பார்த்தார். அவர் அவ்வாறு செய்யாது போகவே, அவரைப் பார்த்து, "நீர் என்ன சாதி?'' என்று கேட்டார்.

மகான் அவர்கள், ''என்னைப் பார்த்தால் என்ன சாதி என்று உமக்குத் தோன்றுகிறது?''என்று கேட்டார். உடனே உயர்சாதிக்காரர், ''ஒருவரைப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியுமா சாதியை?''என்று பதில் கேள்வி போட்டார்.

நாராயணகுருவும் உடனே, ''பார்த்துத் தெரியாத ஒரு விடயத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியுமா?''என்று எதிர் கேள்வி கேட்க, இவர் ஒரு மகானாக இருக்கவேண்டும் என்று உணர்ந்து, அவருக்கு வழிவிட்டு உயர் சாதிக்காரர் ஒதுங்கி நின்றார்.

30 October 2020, 11:54